
பர்த்டே ஸ்பெஷல்: 'நம்ம வீட்டு பிள்ளை' சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் இன்று!
செய்தி முன்னோட்டம்
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த அனைவரும் ஜெயித்ததில்லை. ஆனால், தன் விடாமுயற்சியாலும், உழைப்பாலும், சின்னத்திரை போட்டியாளராக நுழைந்து, இன்று 'மாவீரன்'ஆக வென்று காட்டியுள்ள சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் இன்று.
காமெடி தான் அவரது பலம் என்பதை சிறுவயதிலேயே உணர்ந்த அவர், மேற்படிப்புக்காக வருவதாக சொல்லி தான், விஜய் டிவியின் 'கலக்கப்போவது யாரு' போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார் என அவர் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
பின்னர், மேடை நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக முன்னேறினார்.
இவரது திறமை மேல் நம்பிக்கை வைத்து, தனுஷ், தன்னுடைய 3 படத்தில், தன்னுடன் இணைத்துக்கொண்டார்.
இதுதான் அவர் வெள்ளித்திரையில் கால் வைத்த முதல் தருணம். அதே நேரம், பாண்டிராஜ் இயக்கத்தில், 'மெரினா' என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.
சிவகார்த்திகேயன்
நண்பனுக்காக தயாரிப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன்
சிவா, தன்னுடைய நெருங்கிய நண்பரான அருண்ராஜா காமராஜாவிற்காக தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். இவரது முதல் தயாரிப்பு 'கானா'.
அனிருத் இசையில், நெல்சன் இயக்கிய முதல் படம் கோலமாவு கோகிலா. இந்த படத்தில் பாடலாசிரியராக அறிமுகம் ஆனார் SK .
இவருடைய மிகபெரிய பலம், முகம் சுளிக்க வைக்காத இவரின் காமெடி. ஆனால், அதை மாற்றும் விதமாக, நெல்சனின் அடுத்த படமான டாக்டர் படத்தில், இறுக்கமான டாக்டர் வேடத்தை துணிந்து ஏற்றார்.
இதுவரை கிட்டத்தட்ட 21 படங்களில் நடித்துள்ள சிவா, தற்போது, 'அயலான்', 'மாவீரன்' என இரு பெரும் படங்களில் நடித்து வருகிறார்.
தமிழக அரசின் கலைமாமணி விருது, கடந்த 2021 -ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.