சிவகார்த்திகேயனை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குனர் பாண்டிராஜின் பிறந்தநாள்!
தமிழ் சினிமாவில் தரமான படங்களை வழங்கும் இயக்குனர்களில் முதன்மையாக உள்ளவர் இயக்குனர் பாண்டிராஜ். ரசிகர்கள் விமர்சகர்கள் என அனைவரின் நன்மதிப்பைப் பெற்ற இவரின் பிறந்தநாள் இன்று. பாசம், உறவு, காதல், குடும்பம் ஆகியவற்றிருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தேடுத்து இயக்குவார். இவர் இயக்கும் படங்களில் ரத்தம் சிந்தும் காட்சிகள் பெரும்பாலும் இடம் பெற்றிருக்காது. பசங்க: பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், காதல், குடும்பம் என அனைத்தையும் கொண்ட கதையை ஒரே படத்தில் விரிவாக காட்டினார். இந்த திரைப்படம் 2009-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக தமிழக அரசிடம் இருந்து விருது பெற்றது.
இயக்குனர் பாண்டிராஜின் பிறந்தநாள்
வம்சம்: இரண்டாவது திரைப்படமான வம்சத்தில் அருள்நிதியை நாயகனாக அறிமுகப்படுத்தினார். 2010 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் சுனைனா, ஜெயபிரகாஷ், கஞ்சா கருப்பு, அனுபமா குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்தது. மெரினா: தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த நடிகர் சிவகார்த்திகேயனை ஹீரோவாக்கியது இயக்குநர் பாண்டியராஜ் தான். நகர்ப்புற இளைஞர்களின் கனவுகள் குறித்த கதையை நகைச்சுவை கலந்து வெளிப்படுத்தியிருப்பார். எதற்கும் துணிந்தவன்: கடைசியாக நடிகர் சூர்யா, நடிகை பிரியா மோகன் ஆகியோரை வைத்து உருவாக்கினார். இந்த படம் தமிழோடு சேர்த்து நான்கு மொழிகளில் மாஸ் திரைப்படமாக வெளியானது.