NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / புகழ்பெற்ற பாடகர் முகமது ரஃபியின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாகிறது: IFFI விழாவில் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    புகழ்பெற்ற பாடகர் முகமது ரஃபியின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாகிறது: IFFI விழாவில் அறிவிப்பு
    டிசம்பர் 24 ஆம் தேதி மறைந்த பாடகர் பிறந்த நூற்றாண்டு விழா

    புகழ்பெற்ற பாடகர் முகமது ரஃபியின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாகிறது: IFFI விழாவில் அறிவிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 27, 2024
    07:52 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரபல இந்திய பின்னணிப் பாடகர் முகமது ரஃபியின் மகன் ஷாஹித் ரஃபி, தனது தந்தையின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

    அடுத்த மாதம் டிசம்பர் 24 ஆம் தேதி மறைந்த பாடகர் பிறந்த நூற்றாண்டு விழாவை ஒட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

    பல்வேறு மொழிகளில் 1,000 படங்களுக்கு மேல் பாடிய ரஃபிக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்த செய்தி வெளியிடப்பட்டது.

    இயக்குனர்

    'OMG' இயக்குனர் உமேஷ் சுக்லா ரஃபியின் வாழ்க்கை வரலாற்றை இயக்குகிறார்

    OMG - ஓ மை காட் மற்றும் 102 நாட் அவுட் போன்ற படங்களில் பணியாற்றிய புகழ்பெற்ற இயக்குனர் உமேஷ் சுக்லாவுடன் ஷாஹித் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    "டிசம்பரில் அறிவிப்பு வெளியிடப்படும். நான் ரஃபி சாப்-பின் வாழ்க்கை வரலாற்றை உருவாக்குகிறேன்... இது ரஃபி சாஹாப்பின் வாழ்க்கைக் கதையாக இருக்கும்" என்று ஷாஹித் IFFI நிகழ்ச்சியின் ஒரு அமர்வில் அறிவித்தார்.

    அஞ்சலி

    ரஃபியின் பிரபல பாடல்கள் இடம்பெறும் வாழ்க்கை வரலாறு

    இந்த வாழ்க்கை வரலாறு ரஃபியின் வாழ்க்கையை மட்டும் விவரிக்காமல், இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பைக் கொண்டாடும் அவரது பிரபல பாடல்களையும் உள்ளடக்கும். இந்த திட்டம் சுக்லாவின் இயக்கத்தில் முழு நீள திரைப்படமாக இருக்கும்.

    ரஃபிக்கு IFFI அஞ்சலி செலுத்துவதில் நடிகை ஷர்மிளா தாகூர், பாடகர்கள் சோனு நிகம் மற்றும் அனுராதா பௌட்வால் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் சுபாஷ் கை உட்பட பல துறைசார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    வாழ்க்கை வரலாறு குறித்த அறிவிப்பு நிகழ்வுக்கு சிறப்பு சேர்த்தது.

    இந்த படத்தின் மூலம், மறைந்த பாடகரின் ரசிகர்கள் அவரது இசைப் பயணத்தையும், இந்திய சினிமாவுக்கு அவரது சின்னமான பாடல்கள் மூலம் ஆற்றிய பங்களிப்பையும் நினைவுபடுத்தும் ஒரு முயற்சி.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாடகர்
    திரைப்படம்
    திரைப்பட விழா

    சமீபத்திய

    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்
    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்

    பாடகர்

    தனது திருமண வாழ்க்கையை குறித்து மனம் திறந்து பேசியுள்ள பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி பாடகர் அறிவு
    நான்கு ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தடை - பாடகி சின்மயி சின்மயி
    VIT பல்கலைக்கழகத்தின் விழா ஒன்றில் பங்கேற்ற பாடகர் பென்னி தயாள், ட்ரோன் தாக்கி காயம் ட்ரெண்டிங் வீடியோ
    பாம்பே ஜெய ஸ்ரீ உடல்நலம் சீராக உள்ளது - ட்விட்டரில் தகவல் இங்கிலாந்து

    திரைப்படம்

    இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் 'மகாகாளி'யின் ஃபர்ஸ்ட்-லுக் காட்சி வெளியானது சினிமா
    குறி வச்சி இரை விழுந்ததா? வேட்டையன் படம் குறித்து ரசிகர்களின் சமூக வலைதள விமர்சனம் இதுதான் வேட்டையன்
    லப்பர் பந்து OTTயில் வெளியாகும் தேதி இதுதான்! திரைப்பட வெளியீடு
    எதிர்பார்த்த அளவு இல்லை; வேட்டையன் படத்தின் இரண்டு நாள் கலெக்சன் இவ்ளோதானா? வேட்டையன்

    திரைப்பட விழா

    ஜவான் படத்திற்காக தாதா சாஹேப் பால்கே விருதுகளை வென்ற ஷாருக்கான், நயன்தாரா நயன்தாரா
    சென்னையில் உலக சினிமா விழா 2024: தேதி, நேரம் உள்ளிட்ட விவகாரங்கள் சென்னை
    இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஜிகர்தண்டா 2
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025