பிக் பாஸ் தமிழ் 8: ஜாக்குலின், சௌந்தர்யாவை டார்கெட் செய்த ஹவுஸ்மேட்ஸ்?
செய்தி முன்னோட்டம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால் யார் டைட்டில் ஜெயிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
TTFவை ராயன் வென்ற நிலையில் அவர் பைனான்ஸ் நோக்கி ஏற்கனவே சென்று விட்டார்.
இவரைத்தவிர முத்துக்குமரன், தீபக், ஜாக்குலின், சௌந்தர்யா, பவித்ரா, அருண் மற்றும் VJ விஷால் என 8 போட்டியாளர்கள் தற்போது அந்த வீட்டில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் வீட்டை விட்டு ஏவிக்ட் ஆன முன்னாள் போட்டியாளர்கள் இந்த வாரம் வீட்டிற்கும் வந்தனர். வந்தவர்களில் யாரேனும் தக்க வைக்கப்பட்டு டாப் 8 போட்டியாளர்களின் ஒருவர் வெளியேற்றப்படக்கூடும் என பேச்சு நிலவி வந்தது.
அதற்கேற்றாற்போல, இன்றைய டாஸ்க்கும் அப்படிதான் இருந்தது.
டார்கெட்
ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யாவை டார்கெட் செய்த முன்னாள் கண்டெஸ்டண்ட்ஸ்
டாப் 8 போட்டியாளர்களில் யார் இந்த போட்டியில் இருந்து மாற்றாடவேண்டும் என போட்டியாளர்கள் கூற வேண்டும். குறிப்பாக எவிக்ட் ஆன போட்டியாளர்கள்.
ஏற்கனவே வந்த நாள் முதல் முன்னாள் போட்டியாளர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு வம்பிழுத்த நிலையில், இன்றைய டாஸ்கின் போதும் அப்படிதான் நடந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோபடி, அவர்கள் தேர்ந்தெடுத்த 2 போட்டியாளர்கள் ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யா.
அனைவருமே ஜாக்குலின் துணையின்றி விளையாடுவதே இல்லையென்றும், நேரத்திற்கு தகுந்தாற் போல நட்பை புதுப்பித்து கொள்கிறார் எனவும் கூறினர்.
அதேபோல சௌந்தர்யா தன்னுடைய திறமையை காட்டி இங்கே ஜெயிக்கவில்லை என்றும், க்யூட் ரியாக்ஷன்ஸ் மற்றும் PR மூலமாக மட்டுமே அவருக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைப்பதா எனக்கூறினர்.
இன்றைய நிகழ்வில்தான் உண்மையில் என்ன நடந்தது என தெரியவரும்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Day95 #Promo3 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) January 9, 2025
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #பிக்பாஸ் #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/A4b0BR6opl