பிக் பாஸ் தமிழ் சீசன் 9: வைல்ட் கார்டு போட்டியாளர்கள் என்ட்ரி எப்போது?
செய்தி முன்னோட்டம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் சுவாரசியம் கூட்ட வைல்ட் கார்டு போட்டியாளர்களை களமிறக்க தயாராகி உள்ளது சேனல் தரப்பு. அதன்படி தற்போது வரை, திவ்யா கணேஷ், அமித் பார்கவ் மற்றும் '90ஸ் கிட்ஸ்களின் கிரஷ் என கூறப்பட்ட சின்னத்திரை நடிகரும், VJவுமான ப்ரஜின் மற்றும் அவரின் மனைவி சாண்ட்ரா ஆகியோர் வைல்ட்கார்டு போட்டியாளர்களாக உள்ளே செல்லப்போவதாக விஜய் டிவி ப்ரோமோ வீடியோ வெளியிட்டது. எனினும் இன்று வரை அவர்கள் வீட்டிற்குள் செல்லவில்லை. இந்த நிலையில் இணையத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பிக் பாஸ் ரெவ்யுவர் இமாத் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதன் படி, இந்த போட்டியாளர்கள் நவம்பர் முதல் வாரத்தில் உள்ளே நுழையவுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Within 2 days…..
— Imadh (@MSimath) October 29, 2025
As of now (29/10/2025 - IST 1:23pm) no one entered.#biggbosstamil #biggbosstamil9 https://t.co/rDfOnlukk0
சண்டை
வீட்டையே தனியாளாக எதிர்த்து நிற்கும் watermelon ஸ்டார்
இன்றைய அன்சீன் வீடியோக்களில் வீட்டில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து ஹவுஸ்மெட்ஸ் உடனும் வாட்டர்மெலன்(தர்பீஸ்) ஸ்டார் திவாகர் மல்லுக்கு நிற்கிறார். அவரை தூபம் ஏற்றி விட VJ பார்வதியும் அவ்வப்போது கொளுத்தி போடுகிறார். வெளியான வீடியோப்படி, திவாகர் கேமரா முன் நின்று தனது ரசிகர்களுக்கு தன்னுடைய நடிப்பை ரெஜிஸ்டர் செய்து பெர்ஃபார்ம் செய்து கொண்டிருந்தார். அப்போது பின்னாடி இருந்து வினோத், கம்ருதின் என பலரும் அவரை வம்பிழுப்பதாகவும், அவரை பயன்படுத்தி பேமஸ் ஆக முயற்சிப்பதாகவும் ஒரு பெரிய குற்றச்சாட்டை முன்வைத்தார். அவருடைய புகாரை வீட்டின் தலைவர் பிரவீன் சரியாக கையாளாமல் மற்றவர்களுடன் சேர்ந்து நக்கல் அடிப்பதாகவும் அடுத்த பந்தை வீசினார். தடுக்க வந்த FJ, கனி மற்றும் விக்கல்ஸ் விக்ரமையும் அவர் விட்டு வைக்கவில்லை.