LOADING...
பிக்பாஸ் தமிழ் 8: "வெளியே PR இருக்கு..என்னோட நிஜ பெயர் இதுதான்" அன்சீனில் ராணவ் வெளியிட்ட ரகசியம்
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் நிறைவடைய உள்ளது.

பிக்பாஸ் தமிழ் 8: "வெளியே PR இருக்கு..என்னோட நிஜ பெயர் இதுதான்" அன்சீனில் ராணவ் வெளியிட்ட ரகசியம்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 23, 2024
02:09 pm

செய்தி முன்னோட்டம்

விஜய் டிவியில் வெளியாகி வரும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழ் தற்போது 8வது சீசனில் உள்ளது. இரு மாதங்களுக்கு முன்னர் துவங்கிய இந்த நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் நிறைவடைய உள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற எவிக்‌ஷனில் ரஞ்சித் வெளியேற்றப்பட்டதால், தற்போது முத்துக்குமரன், அருண் பிரசாத், விஷால், ரஞ்சித், ராணவ், ஜெஃப்ரி, தீபக், அன்ஷிதா, பவித்ரா, ஜாக்குலின், மஞ்சரி, செளந்தர்யா ஆகிய 12 பேர் எஞ்சி உள்ளனர். சென்ற வார இறுதியில் இரண்டு எவிக்ஷன்கள் இருக்கும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் ஒருவர் மற்றும் வெளியேற்றப்பட்டார். ரஞ்சித் உடன் ராணவ்-உம் வெளியேற்றப்படுவார் என பலரும் எதிர்பார்த்தனர். காயம் காரணமாக அவர் போட்டிகளில் விளையாடாத முடியாத காரணத்தினால் அவர் வெளியேறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

PR சப்போர்ட் 

வெளியே PRகளை வைத்திருப்பதை ஓப்பனாக கூறிய ராணவ்

இந்த நிலையில், நேற்று இரவு போட்டியாளர்கள் உரையாடி கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. குறிப்பிட்ட வீடியோவில் ராணவ், தான் வெளியே PR செட் செய்து விட்டு வந்ததை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். அதோடு தான் பைனல்ஸ் வரை இதன்மூலம் செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் கூறினார். அதோடு, தன்னுடைய இயற்பெயரையும் அப்போது கூறினார். ராணவ் இயற்பெயர் பிரின்ஸ் எனவும், தனக்கு ஜாதகப்படி வைக்கப்பட்ட பெயர் லோகேஷ்வரன் எனவும் கூறினார். இந்த உரையாடலில் தீபக், முத்துக்குமரன், மஞ்சரி மற்றும் ஜாக்குலின் உடன் இருந்தனர். அப்போது ராயனின் இயற்பெயர் மகேஷ் என ஜாக்குலின் கூறியதும் குறிப்பிடதக்கது. பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வெளியே PR வேலை பார்க்கிறார்கள் என அவ்வப்போது பேச்சு வந்தாலும், ஒரு போட்டியாளரே இதை ஒப்புக்கொண்டது இப்போதுதான்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post