பிக்பாஸ் தமிழ் 8: இந்த வாரமும் டபுள் எவிக்ஷன்; ராணவ், மஞ்சரி வெளியேற்றம் எனத் தகவல்
செய்தி முன்னோட்டம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் 8வது சீசன் 90 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
டிக்கெட் டூ ஃபைனல் டாஸ்க் மூலம், போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்குள் நுழைய கடுமையாகப் போட்டியிட்டனர்.
இந்நிலையில் இந்த வாரம், 4வது முறையாக டபுள் எவிக்ஷன் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிக்கெட் டூ ஃபைனல் வாய்ப்பை பயன்படுத்த முடியாத ராணவ், மஞ்சரி குறைந்த வாக்குகளால் எலிமினேட் செய்யப்பட்டனர்.
இருவரும் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் ஆவர். ராணவ் சனிக்கிழமை எபிசோடில் எவிக்சன் செய்யப்படும் நிலையில், மஞ்சரி ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் வெளியேற்றப்படுவதாகக் கூறப்படுகிறது.
போட்டியாளர்கள்
தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள்
முதலாவது வாரத்தில் முத்துக்குமரனுக்கு டஃப் கொடுத்த மஞ்சரி, பின்னர் ஜாக்குலின் மற்றும் சவுந்தர்யாவுடன் மோதலில் ஈடுபட்டார்.
ராணவ், முதலில் அமைதியாக இருந்தாலும், பின்னர் பல போட்டியாளர்களுடன் கடுமையான மோதல்களை சந்தித்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு கையை உடைத்ததாகக் கூறிய சம்பவம் சர்ச்சையாக மாறியது. டைட்டில் வின்னர் ஆகும் திட்டத்தை முன்வைத்த ராணவ், தற்போது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இப்போது முத்துக்குமரன், தீபக், பவித்ரா, ராயன், ஜாக்குலின், சவுந்தர்யா, விஜே விஷால், அருண் ஆகிய 8 போட்டியாளர்கள் மட்டும் உள்ளனர்.
சீசன் முடிவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. இறுதிப் போட்டிக்கான காத்திருப்பில் ரசிகர்கள் உள்ளனர்.