NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பிக்பாஸ் தமிழ் சீசன் 8: இந்த சீசனிலும் பாத்ரூம் பஞ்சாயத்து வரப்போகுதா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிக்பாஸ் தமிழ் சீசன் 8: இந்த சீசனிலும் பாத்ரூம் பஞ்சாயத்து வரப்போகுதா?

    பிக்பாஸ் தமிழ் சீசன் 8: இந்த சீசனிலும் பாத்ரூம் பஞ்சாயத்து வரப்போகுதா?

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 09, 2024
    01:46 pm

    செய்தி முன்னோட்டம்

    பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ஆட்டம் சூடு பிடிக்க துவங்கி விட்டது. முதல் நாளே ஆண்கள் அணி, பெண்கள் அணி என பிரித்து விளையாட வைத்தார் பிக் பாஸ்.

    சில பல ஆட்டங்களுக்கு பின்னர் முதல் நாளே எலிமினேஷனும் நடைபெற்றது.

    இதற்கிடையே நேற்றைய ஆட்டத்தின் போது, ஆண்கள் தரப்பில் இருந்து ஒரு போட்டியாளர் அவர்கள் சார்பாக விளையாடுவதற்கு பெண்கள் வீட்டிற்கும், பெண்கள் தரப்பில் இருந்து அவர்கள் சார்பாக விளையாட ஒரு பெண் போட்டியாளர் ஆண்கள் வீட்டிற்கும் செல்ல வேண்டும் என்று பிக்பாஸ் டாஸ்க் கொடுத்தார்.

    அதனைத்தொடர்ந்து ஆண்கள் அணியிலிருந்து முத்து குமரனும், சமரசத்துக்கு பின்னரே, பவித்ரா ஆண்கள் அணிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இருவரும் அணி மாறிக் கொண்டனர்.

    பாத்ரூம் பஞ்சாயத்து

    சென்ற சீசனை போலவே இந்த சீசனிலும் பாத்ரூம் பஞ்சாயத்தா?

    இடம்மாறி இருவரும் அங்கிருக்கும் பாத்ரூமை தான் பயன்படுத்த வேண்டும். பெண்கள் அணிக்குச் சென்றுள்ள முத்துக்குமரன் பெண்கள் பயன்படுத்தும் பாத்ரூமைத்தான் பயன்படுத்தவேண்டும்.

    அதேபோல தான் பவித்ராவிற்கும். இந்த நிலையில், பெண்கள் பாத்ரூமிற்குள் சென்ற முத்துகுமரன், யாராவது இருக்கீங்களா எனக் கேட்டுக் கொண்டே பாத்ரூமைத் திறந்தார்.

    அப்போது உள்ளே இருந்து குரல் வரவே, உடனே பாத்ரூமை மூடிவிட்டு வெளியே வந்தார். கடந்த சீசனில் பிரதீப் ஆண்டனி பெண்கள் பாத்ரூமினைத் திறந்து பார்த்தார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானது நினைவிருக்கலாம்.

    அதன் தொடர்ச்சியாக அவர் மேல் பல குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டு அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார் கமல்.

    இந்த முறை அதேபோல் எந்த பஞ்சாயத்தும் வந்து விடுமா என கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிக் பாஸ் தமிழ்

    சமீபத்திய

    வெயிலில் அதிகம் செல்வதால் ஏற்படும் sunburn-ஐ இயற்கையாகவே சரி செய்ய உதவும் கற்றாழை! சரும பராமரிப்பு
    இப்போது நீங்கள் கூகிள் சர்ச்சிலேயே ஆடைகளை ட்ரை செய்து பார்க்கலாம் கூகிள் தேடல்
    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு

    பிக் பாஸ் தமிழ்

    பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக இனி கமல்ஹாசன் தொடரப் போவதில்லையா? கமல்ஹாசன்
    பிக்பாஸ் தமிழ்: பிக்பாஸ் 6 டைட்டில் வின்னர் அஸிம்; இரண்டாம் இடத்தை வென்ற விக்ரமன் விஜய் டிவி
    பிக்பாஸ் ஷெரின் திருமணத்தை அறிவித்தார் - எப்போது?  கோலிவுட்
    பிக் பாஸ் தமிழ் சீசன் 7 அறிவிப்பு, இன்று இரவு, 7:07 மணிக்கு வெளியாகிறது  விஜய் டிவி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025