பிக்பாஸ் தமிழ் சீசன் 8: 'பிராங்க்' காமெடி செய்த ஆண்கள் அணி
செய்தி முன்னோட்டம்
பிக்பாஸ் தமிழ் எட்டாவது சீசன் ஆரம்பமாகி 4 நாட்கள் ஆன நிலையில், ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க ஹவுஸ்மேட்ஸ் பல வேலைகளை செய்து வருகின்றனர்.
போதாதற்கு பிக்பாஸ் வேறு ஆண்கள் அணி, பெண்கள் அணி என பிரித்து டாஸ்க் தருகிறார்.
சேர்ந்து இருந்தாலாவது கன்டென்ட்டிற்காக முட்டி கொள்ளலாம். பிரித்து விட்டனர், இப்போது என்ன செய்யலாம் என யோசித்தர்களோ என்னமோ! ஆண்கள் அணி பிராண்ட் காமெடி செய்யலாம் என முடிவெடுத்து கோதாவில் இறங்கினர்.
அருண் பிரசாத்
சும்மா இருந்தவரை கீழே தள்ளிய ரஞ்சித்
நேற்றைய ப்ரோமோவில் ஆண்கள் அணியில் ரவீந்தர் மற்றும் ரஞ்சித் கவர்ச்சியுடன் மோதுவது போல கட்டப்பட்டதே, அது இந்த பிராங்கின் ஒரு கிளிப் தான்.
பிரமோ பார்த்து எபிசொட் பார்க்க வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஃபாட்மேன் ரவீந்தர் 'பிராங்க்' என்கிற பெயரில் பெண்கள் அணியின் கவனத்தை ஈர்க்க, சண்டை போடும் ஐடியாவை வழங்கினார்.
'என்னை டி போட்டு கூப்பிடாதே' என பவித்ரா ஆரம்பித்த சண்டையை, ரவீந்தர் மற்றும் ரஞ்சித் பிடித்து கொண்டு தொடர்ந்து வாதம் செய்யத்துவங்கினர்.
இருவரும் ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாக பேச ஆரம்பித்தார்கள்.
'கைய நீட்டி பேசாத.. அவ்வளவுதான் சொல்லிட்டேன்' என்ற ரஞ்சித்தின் பேச்சு, பதற்றத்தை அதிகரித்தது. மேலும், சும்மா இருந்த அருண் பிரசாத்தை கீழே தள்ளினார் ரஞ்சித்.
பெண்கள் அணி
ஏமாந்த பெண்கள் அணி
இந்த காமெடி சண்டையை பெண்கள் அணியினர் உண்மையாகவே நம்பினர்.
மற்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, சண்டையை நிறுத்த முயன்ற ஜாக்குலின், இருவரையும் சமாதானப்படுத்த முற்பட்ட போது தான் இது 'பிராங்க்' என தெரிந்துகொண்டார்.
உண்மையை அறிந்ததும் கோவத்தின் உச்சத்திற்கே சென்றார் ஜாக்குலின். 'இந்த சண்டையைப் பார்த்து பதறிட்டேன். சண்டையை நிறுத்த போய் என கையெல்லாம் வலிக்குது. சண்டையை நிறுத்த வந்த நான் என்ன முட்டாளா?' எனக்கொந்தளித்தார்.
விமர்சனம்
ரசிகர்கள் விமர்சனம்
ஜாக்குலின் போலவே நேற்றைய எபிசொட் பார்த்தவர்கள், 'இவ்வளவு மோசமான பிராங்க், தேவையா?' என விமர்சிக்கிறார்கள்.
மேலும், இந்த சண்டைக்கு சற்றுநேரத்துக்கு முன்பு 'டாஸ்க்' என்கிற பெயரில் பிக்பாஸ் கொடுத்த போட்டிகள் எல்லாம்..பிக்பாஸிற்கு இன்னும் பயிற்சி வேண்டுமோ எனக்கூறும் அளவிற்கு உள்ளது.
முதல் 2 சீசன்களில் போட்டியாளர்களை வெச்சு செய்த பிக்பாஸ், இப்போது நேயர்களை வெச்சு செய்கிறார் போல.
இதற்கிடையில், 'பிராங்க்' காமெடி வேறு எந்தவொரு சுழற்சியில் நடந்தாலும், பிக்பாஸ் சீசன் எட்டை ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.