பிக்பாஸ் தமிழ் சீசன் 8 Day 16: பிக்பாஸ் ஸ்டார் ஹோட்டலில் அட்ராசிட்டி செய்த ஆண்கள் அணி
செய்தி முன்னோட்டம்
நேற்றை பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஹவுஸ்மேட்ஸிற்கு ஸ்டார் ஹோட்டல் டாஸ்க் தரப்பட்டது.
அதில் ஆண்கள் அணி, பெண்கள் அணி இருவரும் பிரிந்து, ஒரு அணி ஹோட்டல் நிர்வாகமாகவும், மற்றொரு அணி விருந்தினர்களாகவும் பங்குகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
விருந்தினர்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் அணியே வெற்றியாளராக கருதப்படும் எனவும் கூறப்பட்டது.
முதலில் பெண்கள் அணி ஹோட்டல் நிர்வாகத்தினராக களமிறங்க முடிவெடுத்தனர். ஆண்கள் அணியில், பிசினஸ்மேனாக தீபக்கும், காதலில் தோல்வியுற்ற இளைஞனாக அருணும், அவர் உடன் வந்த நண்பராக விஷாலும் கலகலப்பூட்டினர்.
அதேபோல கிராமத்திலிருந்து வந்த இளைஞராக சத்யா, கொங்கு தமிழ் பேச சிறிது சிரமப்பட்டார் என்றே கூறவேண்டும்.
எனினும் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்ய அவர் மேற்கொண்ட முயற்சி பாராட்டத்தக்கது.
டாஸ்க்
கில்லர் காயின் டாஸ்க்
அடுத்ததாக நாமினேஷன் பிரீ பாஸ் பெறுவதற்கான டாஸ்கினை அறிவித்தார் பிக்பாஸ்.
அதன்படி, கில்லர் காயின் ஒன்று வழங்கப்படும் என்றும், அதனை எதிர் அணியின் மீது ஒட்ட வேண்டும் எனவும், அதை அணி கூட்டாக எப்படி எதிர்கொள்கிறது என்பதே டாஸ்க் என அறிவித்தார்.
அதில் ஆண்கள் அணி, அனைத்து சுற்றுகளிலும் பெண்கள் அணியினை வீழ்த்தி வெற்றியை தக்க வைத்தது.
பெண்கள் அணியும் போட்டியில் சரிக்கு சமமாக போராடிய விதம் பாராட்டத்தக்கது.
எனினும் இந்த போட்டியில் தோற்றத்தை பெண்கள் அணியில் ஜாக்குலின் உள்ளிட்ட ஒரு சிலரால் ஏற்று கொள்ள முடியவில்லை.
இது 'unfair' கேம் என புலம்பியபடி இருந்ததை காண முடிந்தது. மறுபுறம் சத்யா, பெண்கள் அணி சிறப்பாக டஃப் கொடுத்து விளையாடியதை பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.
ப்ரோமோ
இன்றைய ப்ரோமோவில்..
நேற்று பெண்கள் அணி, ஹோட்டல் நடத்தியதை தொடர்ந்து இன்று ஆண்கள் அணி ஹோட்டல் நிர்வாகத்தினை கையில் எடுக்கவுள்ளனர்.
அதில் பெண்கள் அணி விருந்தினர்களாக வருகிறார்கள். தர்ஷா குப்தா ஒரு நடிகையாகவும், அன்ஷிதா வயதான பாட்டியாகவும், அவருடைய பேரனாக ஜெபிரியும் நடிக்கின்றனர்.
அதே போல சோஷியல் மீடியா புகழ் கொண்ட மாமியாராக ஆனந்தியும், அவருடைய மருமகளாக பவித்ராவும் நடிக்கின்றனர் என காட்டப்பட்டுள்ளது.
இன்றைய போட்டியில் ஆண்கள் அணி, விருந்தினர்களை குறையின்றி கவனித்து வெற்றி பெறுவார்களா?
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Day17 #Promo1 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 23, 2024
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/djs0EqaMJ9