Loading...
பிக்பாஸ் வீட்டில் 50வது நாள் சீக்ரெட் டாஸ்க்: இந்த வாரம் மிட்-வீக் எவிக்‌ஷனில் வெளியேறுவது யார்?
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் 50வது நாள் சீக்ரெட் டாஸ்க்: இந்த வாரம் மிட்-வீக் எவிக்‌ஷனில் வெளியேறுவது யார்?

எழுதியவர் Venkatalakshmi V
Nov 05, 2026
02:26 pm

செய்தி முன்னோட்டம்

விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. போட்டியாளர்களுக்கு இடையே போட்டிகள் கடுமையாகி வரும் சூழலில், இந்த வாரம் 'தி கிரேட் திருந்துங்கடா அகாடமி' என்ற சுவாரசியமான வீக்லி டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த வார டாஸ்க்கில் போட்டியாளர்களுக்கு முதியோர் கதாபாத்திரம் வழங்கப்பட்டுப் பள்ளிச் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்: அஸ்மிதா ஆசிரியர்: வினோத் பாபு மருத்துவர்கள்: தன்யா மற்றும் ஷாத்திகா சமையல்காரர்கள்: தன்யா மற்றும் ஷாத்திகா

சீக்ரெட் டாஸ்க்

சீக்ரெட் டாஸ்க்: சீரியல் கில்லராக மாறிய அஸ்மிதா & ஜேசன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியத்தை கூட்ட அவ்வப்போது சீக்ரெட் டாஸ்க்குகள் கொடுக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த வாரம் அஸ்மிதா மற்றும் ஜேசனுக்கு பிக்பாஸ் சீக்ரெட் டாஸ்க் வழங்கியுள்ளார்.

அஸ்மிதாவை ஒரு 'சீரியல் கில்லர்' ஆகவும், அவருக்கு உதவியாளராக ஜேசனையும் பிக்பாஸ் நியமித்துள்ளார்.

பிக்பாஸ் அளித்த போன் மூலமாக வந்த முதல் கட்டளையின்படி, போட்டியாளர் அக்‌ஷிதாவின் வாயிலிருந்து "ஐ லவ் யூ டூ" ன்ற வார்த்தையை வரவழைக்க வேண்டும்.

அஸ்மிதா தனக்குக் கொடுக்கப்பட்ட இந்த முதல் இலக்கை சாதுரியமாக முடித்துள்ளார்.

அடுத்தடுத்த கொலை இலக்குகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

மிட்-வீக் எவிக்‌ஷன்

இந்த வாரம் மிட்-வீக் எவிக்‌ஷன்?

இதனிடையே பிக்பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், இந்த வாரம் நடுவில் மிட்-வீக் எவிக்‌ஷன் நடத்தப்படவுள்ளதாகவும், அதில் போட்டியாளர் அக்‌ஷிதா வெளியேற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

கடந்த வாரம் டிடிஎஃப் வாசனுடன் அக்‌ஷிதா இணைந்து செயல்பட்டது குறித்து குறும்படம் போட்டு காட்டப்பட்டது.

இது ரசிகர்கள் மத்தியில் அவருக்கு சற்று எதிர்மறையான பிம்பத்தை உருவாக்கியிருந்த நிலையில், இந்த வாரம் அவர் வெளியேறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியை தினமும் இரவு 9:30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியிலும், 24 மணி நேர நேரலையை ஜியோஹாட்ஸ்டாரிலும் காணலாம்.

ADVERTISEMENT