Loading...
ஒரே வாரத்தில் இரட்டை அதிர்ச்சி! பிக் பாஸ் சீசன் 10-ல் இருந்து வெளியேறிய சாந்தினி மற்றும் ராகவ்
பிக் பாஸ் சீசன் 10-ல் இருந்து சாந்தினி மற்றும் ராகவ் வெளியேற்றம்

ஒரே வாரத்தில் இரட்டை அதிர்ச்சி! பிக் பாஸ் சீசன் 10-ல் இருந்து வெளியேறிய சாந்தினி மற்றும் ராகவ்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 18, 2026
07:07 pm

செய்தி முன்னோட்டம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் 10-வது சீசனில் இருந்து நடிகை சாந்தினி தமிழரசன் அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த வாரத்திற்கான வெளியேற்ற பட்டியலில் அஷ்மிதா, அவினாஷ், சாந்தினி, கரிஷ்மா, முகேஷ், ஷமா, ஷாதிகா மற்றும் டிடிஎஃப் வாசன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். இதில் மக்களிடம் இருந்து குறைந்த அளவிலான வாக்குகளைப் பெற்றதைத் தொடர்ந்து சாந்தினி தமிழரசன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ராகவ்

உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் ராகவ் அவசர வெளியேற்றம்

சாந்தினியின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, பிக் பாஸ் வீட்டில் மற்றொரு அதிர்ச்சி சம்பவமாக நடிகர் ராகவ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக ஏற்பட்ட தீவிர உடல்நலப் பிரச்சனை காரணமாக அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சை மற்றும் ஓய்வு தேவைப்படுவதன் காரணமாகவே அவர் போட்டியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.

ஒரே வாரத்தில் இரு முக்கியப் போட்டியாளர்கள் வெளியேறியது பிக் பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பையும் மாற்றங்களையும் உருவாக்கியுள்ளது.

ADVERTISEMENT