பாடகி பவதாரிணியின் உடல் சொந்த ஊரில் இன்று நல்லடக்கம்
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பாடகி பவதாரிணியின்(47) உடலுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திரையுலக பிரபலங்கள் உட்பட ஏராளமானோர் நேற்று அஞ்சலி செலுத்தினர். அவரது அஸ்தி இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, தி.நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்துக்கு நேற்று எடுத்து வரப்பட்டது. இசை அமைப்பாளர் இளையராஜாவின் மகளும், தேசிய விருது பெற்ற பின்னணிப் பாடகியுமான பவதாரிணி ஜனவரி-25ஆம் தேதி இலங்கையில் காலமானார். அவர் கடந்த சில மாதங்களாக நான்காம் நிலை கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஒரு நிகழ்ச்சிக்காக இலங்கைக்கு சென்றிருந்த இளையராஜாவுக்கு இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே இலங்கை மருத்துவமனைக்கு சென்ற வர தன் மகளின் உடலை பார்த்து கண் கலங்கினார்.
இன்று இறுதி சடங்குகள் நடத்தப்படும்
இசைஞானி இளையராஜாவின் மகளும், இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோரின் சகோதரியுமான பவதாரிணியின் துரதிர்ஷ்டவசமான மறைவு தமிழ் சினிமா நட்சத்திரங்களையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்று சென்னைக்கு எடுத்து வரப்பட்ட பாடகி பவதாரிணியின்(47) உடலுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அது போக, பிரபல திரை பிரபலங்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பிரபலங்களும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தியதை அடுத்து, பவதாரிணியின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைபுரத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அவரது உடலுக்கு இன்று இறுதி சடங்குகள் நடத்தப்படும்.