'மயில் போல பொண்ணு ஒன்னு!' பாட்டை பாடி பாடகி பவதாரணியின் இறுதிச் சடங்கை நிறைவு செய்தனர் இளையராஜா குடும்பத்தினர்
இசைஞானி இளையராஜாவின் மகளும், இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோரின் சகோதரியுமான பவதாரிணி(47) ஜனவரி-25ஆம் தேதி இலங்கையில் காலமானார். அவர் கடந்த சில மாதங்களாக நான்காம் நிலை கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஒரு நிகழ்ச்சிக்காக இலங்கைக்கு சென்றிருந்த இளையராஜாவுக்கு இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது உடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, அதன் பிறகு, இன்று அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைபுரத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இந்நிலையில், இளையராஜாவின் குடும்பத்தினர் "மயில் போல பொண்ணு ஒன்னு!! குயில் போல பாட்டு ஒன்னு!!" என்ற பாடலை பாடி பவதாரணியின் இறுதிச் சடங்கை நிறைவு செய்தனர்.