MSV இசையில் கண்ணதாசன் எழுதிய சிறந்த 'எவர்க்ரீன்' பாடல்கள்
செய்தி முன்னோட்டம்
'கவியரசு' கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னன் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரின் பிறந்தநாள் இன்று(ஜூன் 24) கொண்டாடப்படுகிறது.
அவர்கள் இருவரும் இவ்வுலகைவிட்டு மறைந்திருந்தாலும், அவர்களது இசை என்றுமே நீங்காமல் நம் மனதில் எப்போதும் நிலைத்திருக்கும்.
எத்தனை பாடல்கள் வந்தாலும், மன அமைதி வேண்டுபவர்களுக்கு கண்ணதாசன் மற்றும் எம்.எஸ்.விஸ்வநாதனின் பாடல்களே இன்றுவரை புகலிடமாக இருந்து வருகிறது.
அப்படிப்பட்ட கலைஞர்கள் இணைந்து பணியாற்றிய சிறந்த பாடல்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.
பரமசிவன் கழுத்தில்
MSV இசையில் டி.எம்.சௌதராஜன் பாடிய இந்த பாடல், 1973இல் வெளியான 'சூரியகாந்தி' என்ற திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது.
உள்ளத்தில் நல்ல உள்ளம்
நடிகர் சிவாஜி நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த பாடலை சீர்காழி கோவிந்தராஜன் பாடியிருந்தார்.
கிட்ஜ்ட்ஸ்
டி.எம்.எஸுக்காக கண்ணதாசன் எழுதிய பாடல்
வந்த நாள் முதல்
1961இல் வெளியான 'பாவ மன்னிப்பு' திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் இப்பாடலுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் டி.கே.ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து இசை அமைத்திருந்தனர்.
அதோ அந்த பறவை
எம்ஜிஆரின் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த பாடல் விடுதலையின் முழக்கம் என்றே கூறலாம்.
பாட்டும் நானே
இந்த பாடலை கண்ணதாசன் டி.எம்,சௌதராஜனுக்காக எழுதினார் என்பது தெரியுமா?
ஆம், டி.எம்.எஸ் தன் குரலால் மட்டுமே எல்லா பாடலும் 'ஹிட்' ஆகிறது என்று பெருமையாக கூறினாராம். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கண்ணதாசன் இந்த பாடலை எழுதி இருக்கிறார். முக்கியமாக, "பாடும் உன்னை நான் பாட வைத்தேனே" என்ற வரிகள் டி.எம்.எஸுக்காகவே எழுதப்பட்டதாகும்.