NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு இரண்டு காதல் தோல்வி உள்ளது: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் பயில்வான் ரங்கநாதன்
    ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு இரண்டு காதல் தோல்வி உள்ளது: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் பயில்வான் ரங்கநாதன்
    1/2
    பொழுதுபோக்கு 1 நிமிட வாசிப்பு

    ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு இரண்டு காதல் தோல்வி உள்ளது: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் பயில்வான் ரங்கநாதன்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 12, 2023
    03:50 pm
    ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு இரண்டு காதல் தோல்வி உள்ளது: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் பயில்வான் ரங்கநாதன்
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறித்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்

    நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். அழகான குடும்பமாக யாத்ரா, லிங்கா என இரு குழந்தைகளுடன் சென்ற அவரது வாழ்க்கை, யார் கண்பட்டதோ, இருவரும் தங்கள் பல வருட திருமண வாழ்க்கையை முறித்து கொள்வதாக அறிவித்தனர். அந்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே, திருமண முறிவிற்கான காரணம் இதுதான் என ஒரு சர்ச்சையை கிளம்பினார், சர்ச்சைகளுக்கு பெயர்பெற்ற நடிகர் மற்றும் மூத்த பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன். இருப்பினும் அதை பற்றி கண்டுகொள்ளாமல், தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தத்தமது வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். பிள்ளைகள் வளர்ப்பில் இருவரும் பங்கெடுத்தும் வருகின்றனர். அந்த சர்ச்சை சற்று ஓய்ந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை செய்தியை வெளியிட்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

    2/2

    தனுஷிற்கு முன்னரே காதலில் விழுந்த ஐஸ்வர்யா:

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷை திருமணம் செய்யும் முன்னர், நடிகர் சிம்புவை காதலித்து வந்ததாக அப்போது செய்திகள் வெளிவந்தன. இவர்கள் இருவரும் பெங்களூருக்கு சென்று திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டதாகவும், அதன் பின்னர் இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூட பேச்சு அடிபட்டது. ஆனால், தற்போது பயில்வான் கூற்றுப்படி, சிம்புவுடன் மணமுறிவு ஏற்பட்டவுடன், ஒரு தொழிலதிபர் மகனை ஐஸ்வர்யா காதலித்ததாகவும், அந்த காதல் தோல்வியில் முடிய, ஐஸ்வர்யாவின் காதலனாக கூறப்படும் அந்த பையன் தற்கொலை செய்துகொண்டதாகவும், அதிலிருந்து மகளின் பெயரை காப்பாற்றவே, கஸ்தூரி ராஜாவிடம் பேசி, தனுஷுடன் மணமுடிக்க ரஜினி திட்டமிட்டார் எனவும் கூறினார். இதைக்கேட்டு ரஜினி மற்றும் தனுஷின் ரசிகர்கள், விளம்பரத்திற்காக இது போல கட்டுக்கதைகளை கூறுகி.றார் பயில்வான் என கடுப்பில் உள்ளனர்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ரஜினிகாந்த்
    தனுஷ்
    வைரல் செய்தி

    ரஜினிகாந்த்

    "நண்பர் சசிகுமாருக்கு...": அயோத்தி படத்திற்கு ரஜினி பாராட்டு வைரலான ட்வீட்
    கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் முதல் விடுதலை வரை, சூப்பர்ஸ்டார் பாராட்டிய படங்கள் கோலிவுட்
    தொடர்ந்து வெற்றி இயக்குனர்களுடன் கை கோர்க்கும் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ்
    முதல் முறையாக கமலுடன் இணையும் ரஜினி? இயக்குனர் இவரா? கமல்ஹாசன்

    தனுஷ்

    நடிகர் தனுஷூக்கு ஏற்பட்ட புதிய சிக்கல் - மரபணுவை பாதுகாக்க மனு!  கோலிவுட்
    தமிழ் திரைப்படங்களுக்கும் ஆப்பிரிக்காவிற்கும் இருக்கும் நீண்ட பந்தம் இந்தியன் 2
    மும்பையில் சொந்தமாக வீடு வைத்திருக்கும் தமிழ் திரை பிரபலங்கள் பட்டியல் கோலிவுட்
    'தேவதை கண்டேன்' பட பாணியில், தன்னை ஏமாற்றிய காதலிக்கு பாடம் புகட்டிய காதலன் வைரல் செய்தி

    வைரல் செய்தி

    காரத்தில் இத்தனை வகைகளா?வைரலாகும் அமெரிக்க உணவகத்தின் மெனு கார்டு  வைரலான ட்வீட்
    ஹிந்தி நடிகர் சல்மான் கான், 2 கோடி ருபாய் மதிப்புள்ள புல்லட் ஃப்ரூப் காரில் வலம்; விவரம் உள்ளே பாலிவுட்
    AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட செய்தி வாசிப்பாளர்! வைரல் வீடியோ செயற்கை நுண்ணறிவு
    பூக்களினால் அல்ர்ஜி, முயலிடம் கடி..சாகுந்தலம் படப்பிடிப்பில் நடைபெற்ற சில சுவாரஸ்ய தகவல்கள் சமந்தா ரூத் பிரபு
    அடுத்த செய்திக் கட்டுரை

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023