ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை அடித்த காரணத்தை கூறிய பெண்; அதிர்ச்சி அடைந்த போலீசார்
சென்ற வாரத்தில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பல கோடி மதிப்புள்ள நகைகளும், வெள்ளி சாமான்களும் கொள்ளை போன விவகாரம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஐஸ்வர்யாவின் புகாரின் பேரில், விசாரணையை துவங்கிய போலீசார், அவரது வீட்டில் வேலை செய்த ஈஸ்வரி தான் கொள்ளை அடித்துள்ளார் என்பதை கண்டுபிடித்தனர். ஐஸ்வர்யாவின் டிரைவரான வெங்கடேசனுடன் இணைந்து ஈஸ்வரி, திருடிய நகைகளை விற்றுவிட்டதாகவும் தெரியவந்துள்ளது. அதை கொண்டு, ECR-ல் 1 கோடி ரூபாய்க்கு வீடு கட்டியுள்ளதாக தெரிகிறது. ஈஸ்வரியின் கணவர், சந்தேகப்பட்டு, அவரிடம், 'ஏது இவ்வளவு பணம்?' எனக்கேட்டதற்கு, ஈஸ்வரி, 'இது ஐஸ்வர்யா கட்டும் வீடு. இன்கம்டாக்ஸ் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக என் பெயரில் கட்ட சொல்லி உள்ளார். நான் அவரின் பினாமி போல' என கூறி சமாதானம் கூறியுள்ளார்.
போலீஸ் காவலில் ஈஸ்வரி
ஈஸ்வரி வசம் இருந்த நகைகளை மீட்டபோது, 100 சவரன் நகைகள் கிடைத்துள்ளது. 100 சவரன் எங்கிருந்து வந்தது எனக்குழம்பிய போலீசார், இருவரையும் 2 நாள் காவலில் எடுத்துள்ளனர். அப்போது விசாரணையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனக்கு கொடுக்கும் சம்பளம் போதாத காரணத்தால் தான் சின்ன சின்ன திருட்டுகளை செய்ய தொடங்கியதாகவும், அதை ஐஸ்வர்யா கண்டுபிடிக்கவில்லை என்றதும், நகைகளை திருட தொடங்கியதாக கூறியுள்ளார் ஈஸ்வரி. "சரி, உன் மாத சம்பளம் எவ்வளவு?" எனக்கேட்டதற்கு, "மாதம் 30,000 தான் சம்பளம்" எனக்கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் ஈஸ்வரி. மேலும் திருடிய நகைகளை விற்று வீடு கட்டினால் அகப்பட்டு விடுவோம் என்று, லோன் வாங்கி காட்டியுள்ளார். தொடர்ந்து லோனையும், நகைகளை விற்று இரண்டே ஆண்டுகளில் அடைந்துள்ளார் இந்த பலே பெண்மணி