
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் கொள்ளை விவகாரம்: ஈஸ்வரி, வெங்கடேசனை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்
செய்தி முன்னோட்டம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பல கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை போன விவகாரம், சென்னையையே உலுக்கியது எனலாம்.
இந்த வழக்கில் காவல்துறையினர், ஐஸ்வர்யா வீட்டில் வேலை செய்த ஈஸ்வரி என்பவரை கைது செய்து விசாரித்ததில், ஐஸ்வர்யா வீட்டில் இருந்து நகையை அவர் திருடியுள்ளது தெரியவந்தது.
ஐஸ்வர்யாவின் டிரைவரான வெங்கடேசனுடன் இணைந்து அவர், திருடிய நகைகளை விற்றுவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
ஆனால், ஈஸ்வரி வசம் இருந்த நகைகளை மீட்டபோது, 100 சவரன் நகைகள் கிடைத்துள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 60 சவரன் நகைகள் திருடப்பட்டது என புகார் தெரிவித்த நேரத்தில், 100 சவரன் எங்கிருந்து வந்தது எனக்குழம்பிய போலீசார், தற்போது இருவரையும் 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டின் அனுமதி பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
ஐஸ்வர்யா வீட்டில் திருடியவர்களை கஸ்டடி எடுத்த காவல்துறை
#BREAKING | நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகைகள் கொள்ளையடித்த விவகாரம்
— Thanthi TV (@ThanthiTV) March 28, 2023
ஐஸ்வர்யா வீட்டு பணியாளர் ஈஸ்வரி, வெங்கடேசன் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி#AishwaryaRajinikanth pic.twitter.com/nyB1cAZ3gc