Loading...
11 நாட்களில் ரூ.21.2 கோடி வசூல்: பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்றும் திணறும் பத்தா
பத்தா திரைப்படம் 11 நாட்களில் தமிழகத்தில் ₹21.2 கோடி வசூலித்துள்ளது.

11 நாட்களில் ரூ.21.2 கோடி வசூல்: பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்றும் திணறும் பத்தா

எழுதியவர் Vasuki
Oct 12, 2026
05:50 pm

செய்தி முன்னோட்டம்

கோலிவுட் திரையுலகில் அண்மையில் வெளியான திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன. இதில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பத்தா திரைப்படம், தமிழ்நாட்டில் தனது 11-வது நாள் முடிவில் ரூ. 21.2 கோடிக்கும் அதிகமான மொத்த வசூலை ஈட்டியுள்ளது. மிகச் சிறந்த விமர்சனங்களைப் பெற்ற ஒரு திரைப்படத்திற்கு இந்த வசூல் சற்று குறைவாகவே பார்க்கப்பட்டாலும், திரையரங்குகளில் ஒட்டுமொத்தமாக ஒரு டீசன்டான வணிக ஓட்டத்தைத் தொடர்ந்து தக்கவைத்து வருகிறது.

ஜெயிலர் 2 வருகை

கடும் சரிவைச் சந்தித்த சிக்மா திரைப்படம்

பத்தா திரைப்படம் தயாரிப்பு மற்றும் விநியோகச் செலவுகளை ஈடுகட்டும் பிரேக்-ஈவன் நிலைக்கு மிக அருகில் உள்ளது.

எனினும், அக்டோபர் 15 அன்று ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 வெளியாவதால் திரையரங்குகள் கைமாறும் சூழலில், அடுத்த 3 நாட்களுக்குள் இப்படம் இலக்கை எட்டியாக வேண்டும்.

மறுபுறம், மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான சிக்மா திரைப்படம் ரசிகர்களை கவரத் தவறி பாக்ஸ் ஆபிஸில் வீழ்ச்சியடைந்தது.

கடந்த 10 நாட்களில் தமிழ்நாட்டில் சுமார் ரூ. 5 கோடியும், தெலுங்கு மாநிலங்களில் ரூ. 3.9 கோடியும் மட்டுமே வசூலித்து இரு பகுதிகளிலுமே கடுமையான ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

ADVERTISEMENT