Page Loader
பாஸ்கர் சக்தி இயக்கும் 'வடக்கன்' படப்பிடிப்பு துவக்கம்
'வடக்கன்' படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

பாஸ்கர் சக்தி இயக்கும் 'வடக்கன்' படப்பிடிப்பு துவக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 24, 2023
01:10 pm

செய்தி முன்னோட்டம்

திரைக்கதை எழுத்தாளர் மற்றும் வசனகர்த்தா பாஸ்கர் சக்தி முதன்முறையாக இயக்கும் 'வடக்கன்' படத்தின் படப்பிடிப்பு நேற்று (பிப்., 23) துவங்கியது. டிஸ்கவரி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில், புதுமுகங்கள் நடிக்கின்றனர். சின்னத்திரையில் பிரபலமான வசனகர்த்தவாக இருந்த பாஸ்கர் ஷக்தி, 'எம்டன் மகன்', மூலம் வெள்ளித்திரைக்கு வந்தார். அந்த படத்தில் ஒரு சிறு வேடத்திலும் நடித்திருந்தார். அதன் பின்னர் 'வெண்ணிலா கபடி குழு','நான் மகான் அல்ல','பாண்டிய நாடு' உள்ளிட்ட படங்களின் வசனகர்த்தாவும், 'அழகர்சாமியின் குதிரை' திரைப்படத்தின் கதாசிரியராகவும் பணிபுரிந்தார். நாடகத் துறையில் பயிற்சி பெற்ற குங்குமராஜ் இந்தக் கதையின் நாயகனாக நடிக்கிறார். கதையின் நாயகி வைரமாலா. இந்தக் காலகட்டத்திற்கு தேவையான ஒரு முக்கியமான விஷயத்தை இந்த படம் பேசும் என டைரக்டர் தெரிவித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

'வடக்கன்' படப்பிடிப்பு துவக்கம்