சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில், பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியாகும் அயலான் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் ரவிக்குமாரின் இரண்டாம் படமான அயலான் திரைப்படத்தை, 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆா் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
படத்திற்கு, ஏஆர் ரகுமான் இசையமைக்கும் நிலையில், பானுப்பிரியா, கருணாகரன், இஷா கோப்பிகர் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.
தமிழின் முதல் ஏலியன் கதையை கொண்ட திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.
2nd card
ஜனவரி 5ல் அயலான் ட்ரெய்லர்
ஏற்கனவே, படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டுக்கு படக்குழுவினர் தயாராகி வருகின்றார்.
இந்நிலையில் இப்படத்தின் டிரைலர், ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
பான் இந்தியா திரைப்படமாக வெளியாகியுள்ள இத்திரைப்படத்தில், அதிகப்படியான கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், 4,500க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளைக் கொண்டு, இந்திய சினிமாவில், முழு நீள லைவ் ஆக்சன் சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக இது உருவாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களில், அதிக நாடுகள் மற்றும் அதிக திரைகளில் வெளியாகும் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
டிரைலர் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்ட ரகுமான்
#Ayalaan Trailer releasing on 5th Jan. Stay Tuned. 👽🔜#AyalaanFromPongal🎇 #AyalaanFromSankranti🎆
— A.R.Rahman (@arrahman) January 3, 2024
@Siva_Kartikeyan @TheAyalaan ‘Chithha’ #Siddharth @Ravikumar_Dir @kjr_studios @Phantomfxstudio @bejoyraj @Gangaentertains @Hamsinient @SunTV @Rakulpreet @ishakonnects @SharadK7… pic.twitter.com/I1scOeceih