அதர்வாவின் அடுத்த படத்தின் நெகிழ்ச்சியான டைட்டில்: 'இதயம் முரளி'
செய்தி முன்னோட்டம்
'இதயம் முரளி': நடிகர் அதர்வாவின் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
நெகிழ்ச்சி தரும் விதமாக இந்த டைட்டில் அவரது தந்தையான மறைந்த நடிகர் முரளியின் அடைமொழியில் இருப்பது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
கடந்த ஆண்டு அதர்வா நடிப்பில் "நிறங்கள் மூன்று" என்ற ஒரே ஒரு படம் தான் வெளியானது.
எனினும் இந்த ஆண்டு "அட்ரஸ்", "தணல்", மற்றும் "டி.என்.ஏ (DNA)" போன்ற படங்கள் பற்றிய அறிவிப்புகள் வந்துள்ளன.
குறிப்பாக, "டி.என்.ஏ" படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
இதற்கிடையில், சிவகார்த்திகேயன் மற்றும் சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் "பராசக்தி" படத்தில் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
First look poster of #IdhayamMurali💝
— AmuthaBharathi (@CinemaWithAB) February 13, 2025
Starring Atharvaa, Thaman & Preity mukhundhan🌟
Directed & Produced by AakashBaskaran 🎥 pic.twitter.com/hBk5ucYCsp
விவரங்கள்
இதயம் முரளி படத்தின் விவரங்கள்
இப்படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார்.
"பராசக்தி" படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். இதயம் முரளி படத்தில் ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹரோ, நட்டி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இப்படம், 1991 ஆம் ஆண்டில் வெளியான "இதயம்" படத்துடன் தொடர்புடையதாக அமைந்துள்ளதால், அதர்வாவின் தந்தை, மறைந்த நடிகர் முரளி பெயரில் அந்த அடைமொழி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இப்படம் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் திரைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது.