
உலக அழகி ஐஸ்வர்யா ராய் விவாகரத்து கோரப்போகிறாரா? பாலிவுட் கிசுகிசு
செய்தி முன்னோட்டம்
இணையத்தில் பாலிவுட்டின் கிசுகிசு செய்திகளை பரப்பும் ஒரு நபர் உமர் சந்து. இவர் நம்மூர் பயில்வான் ரங்கநாதனை போன்றவர்.
அவர் பதிவிட்டுள்ள ஒரு டீவீட்டில் ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனுக்கும் இடையே பரஸ்பர புரிந்துணர்வு இல்லாத காரணத்தால், விரைவில் விவாகரத்து செய்ய உள்ளனர் என பதிவிட்டுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.
அதற்கு ஆதாரமாக, அபிஷேக் பச்சன் சமீபத்தில் கலந்து கொண்ட விழா ஒன்றில், அவரது நிச்சயதார்த்த மோதிரத்தை அணியவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், சமீபத்தில் அமிதாப் பச்சனின் மகள் வழி பேரன் நடித்துள்ள ஒரு வெப் தொடரின் பிரீமியர் விழாவிற்கு அனைவரும் குடும்பமாக கலந்து கொண்டனர். அதனால், உமர் சிந்துவின் கூற்று பொய் என ஐஸ்வர்யாவின் ரசிகர்கள் அவரை வன்மையாக கண்டித்து வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய், அவர்களது குடும்பத்தாருடன்
Bachchans at the premiere of #TheArchies to support Agastya Nanda.#abhishekbachchan #amitabhbachchan #aaradhyabachchan #aishwaryarai #agastyananda @juniorbachchan @AishwaryaRaiWeb @SrBachchan pic.twitter.com/NOIRTGxrqJ
— Khabristan Network (@WebKhabristan) December 6, 2023