பிக்பாஸ் தமிழ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா; 2 வது இடம் மணிச்சந்திரா
செய்தி முன்னோட்டம்
விஜய் டிவியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் 7-வது சீசன், கடந்த அக்டோபர் 2-ம் தேதி துவங்கியது.
இந்த நிகழ்ச்சியில், கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, பூர்ணிமா, மாயா, விசித்ரா, ரவீனா உட்பட 18 பேர் போட்டியாளர்களாக களம் இறங்கினார்கள்.
அவர்களோடு அர்ச்சனா, தினேஷ், அன்ன பாரதி, கானா பாலா, பிராவோ ஆகிய ஐவர் வைல்டு கார்டு என்ட்ரியில் களமிறக்கப்பட்டனர்.
இந்த போட்டியின் இறுதி சுற்றுக்கு, அர்ச்சனா, தினேஷ், மாயா, விஷ்ணு விஜய் மற்றும் மணிச்சந்திரா தேர்வாகினர்.
இந்த போட்டியின் வெற்றியாளர் யார் என்ற தகவலை தற்போது விகடன் வெளியிட்டுள்ளது.
இந்த சீசனின் டைட்டில் வின்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அர்ச்சனா. இரண்டாம் இடத்தில் மணிச்சந்திராவும், மூன்றாமிடத்தில் மாயாவும் தேர்வாகியுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா
First ever wildcard Contestant to win the Title 🔥🔥
— BB Mama (@SriniMama1) January 13, 2024
Congratulations #Archana 🏆
Heartfelt happiness ❤️❤️#PradeepAntony bro 🫡❤️#BiggBossTamil7#BiggBoss7Tamil #BB7TitleWinnerArchana #BB7RealWinnerPradeep #BB7KingPradeep #BB7QueenArchana pic.twitter.com/Owx2Jypkrf