ரஜினியின் 'எந்திரன்' படத்திற்காக மைக்கேல் ஜாக்சன் பாடவிருந்தார்: ஏஆர் ரஹ்மான் தெரிவித்த சுவாரசிய தகவல்
'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான், மறைந்த பாப் ஜாம்பவான் மைக்கேல் ஜாக்சனுடனான தனது தொடர்பு பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலை சமீபத்தில் வெளியிட்டார். மலேசியாவில் நடந்த ஒரு ரசிகர் நிகழ்வில், ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்த ஷங்கரின் பிரமாண்ட படைப்பான 'எந்திரனுக்கு', மைக்கேல் ஜாக்சன் கிட்டத்தட்ட பாடவிருந்ததாக ரஹ்மான் தெரிவித்தார். 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்திற்காக ரஹ்மானின் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2009 இல் லாஸ் ஏஞ்சல்ஸில் அவரை நேரில் சந்தித்தாகவும் அவர் தெரிவித்தார்.
ஆஸ்கார் விருதுக்குப் பிறகு மைகேல் ஜாக்சனுடன் ரஹ்மானின் சந்திப்பு
AR ரஹ்மான் தான் ஆரம்பத்தில் ஜாக்சனை சந்திக்க விருப்பம் தெரிவித்தாராம். ஆனால் அவரது பெயர் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் வரை MJ-விடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அதன் பின்னரே, "மைக்கேலின் குழுவினர் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்கள். நான் சொன்னேன், நான் இப்போது அவரைச் சந்திக்க விரும்பவில்லை. நான் ஆஸ்கார் விருது வென்றவுடன் அவரைச் சந்திப்பேன்" என்று ரஹ்மான் ஃப்ரீ மலேசியா டுடேயுடன் பகிர்ந்து கொண்டார். விருதை வென்ற பிறகு, அவர் ஜாக்சனை சந்தித்தார் என்றும் அந்த அனுபவத்தை "உலகின் மேல் பறப்பது போல" என்று விவரித்தார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடந்த சந்திப்பின் போது அவர்கள் இசை மற்றும் உலக அமைதி பற்றி விவாதித்தனர் என்றும் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
'எந்திரன்' படத்திற்காக மைக்கேல் ஜாக்சனை அணுக முடிவு
ஆஸ்கார் வென்ற பின்னர் இந்தியா திரும்பியதும், ரஹ்மான் இயக்குனர் ஷங்கருடன் தனது சந்திப்பைப் பற்றி கூறி, எந்திரனுக்கு ஜாக்சன்-ஐ பாட கேட்கலாம் என்று பரிந்துரைத்தாராம். "படத்துக்கு எல்லாம் பாடுவீர்களா?" என்று ஷங்கர் சார் ரஹ்மானிடம் கேட்டார். "அவர் ஒரு தமிழ்ப் பாடலைப் பாடுவாரா? நீங்கள் என்ன சொன்னாலும் செய்வோம்" என்று ஷங்கர் தெரிவித்ததாக ரஹ்மான் கூறினார். இருப்பினும், ஜூன் 2009 இல் மைக்கேல் ஜாக்சனின் திடீர் மரணம் காரணமாக இந்த யோசனை நிறைவேறவில்லை என கூறியுள்ளார் ARR.