
ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட RRR பாடல் பற்றி ஏஆர் ரகுமான் பேசியது வைரல்
செய்தி முன்னோட்டம்
இரண்டு முறை ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், RRRன் "நாட்டு நாட்டு" பாட்டை பற்றி பேசியது தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.
எஸ்.எஸ்.ராஜமௌலியின் RRR திரைப்படத்தில் உள்ள "நாட்டு நாட்டு" என்ற பாடல் 2023ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த பாடல் எம்.எம்.கீரவாணி இசையமைத்து, கால பைரவா மற்றும் ராகுல் சிப்லிகஞ்ச்சால் எழுதப்பட்டதாகும்.
இது குறித்து செய்தியாளர்களிடம் "இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் இது நடக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான இந்திய திரைப்படங்கள் ஆஸ்கார் போட்டியில் கலந்துகொளவதே இல்லை." என்று வருத்தம் தெரிவித்த ஏஆர் ரகுமான், "அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகள். அவர்கள் கண்டிப்பாக அதை வெல்ல வேண்டும்." என்று தெரிவித்திருக்கிறார்.
ட்விட்டர் அஞ்சல்
"நாட்டு நாட்டு" குறித்து ஏஆர் ரகுமான் பேசிய வீடியோ
ऑस्कर में हुई 'नाटू नाटू' की एंट्री, ओरिजिनल सॉन्ग कैटिगरी में मिली जगह, ए आर रहमान ने कहा हर साल भारतीय फिल्म को मिलना चाहिए अवार्ड। #RRRMovie #RRRForOscars #NaatuNaatuForOscars #ARRahman pic.twitter.com/jgopC9pD0b
— India TV (@indiatvnews) January 24, 2023