LOADING...
தமிழில் ஜிவி பிரகாஷை இயக்கப்போகும் அனுராக் காஷ்யப் 
தமிழில் ஜிவி பிரகாஷை இயக்கப்போகும் அனுராக் காஷ்யப்

தமிழில் ஜிவி பிரகாஷை இயக்கப்போகும் அனுராக் காஷ்யப் 

எழுதியவர் Venkatalakshmi V
Dec 08, 2023
07:16 pm

செய்தி முன்னோட்டம்

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் முதல்முறையாக நேரடி தமிழ் படம் இயக்கவுள்ளார் என்ற செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தில், ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அனுராக் காஷ்யப், ஹிந்தியில், 'கேங்க்ஸ் ஆஃப் வாசிபூர்', 'தேவ் டி', 'ப்ளாக் ஃப்ரைடே' உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர். அத்தனையும் விமர்சன ரீதியாக வெற்றிபெற்றவை. இந்நிலையில் அவர் நடிப்பிலும் கவனம் செலுத்த துவங்கினார். முதல்முறையாக தமிழில் 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து, அண்மையில் வெளியான 'லியோ'வில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இந்த நிலையில், அவர் தமிழில் நேரடி தமிழ் படத்தை இயக்கவுள்ளார். இதை இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் அண்மையில் ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

தமிழில் ஜிவி பிரகாஷை இயக்கப்போகும் அனுராக் காஷ்யப்