சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர்: தொடர்ந்து விருதுகளை வென்ற Anora
செய்தி முன்னோட்டம்
சீன் பேக்கர் இயக்கிய அனோரா திரைப்படம் சிறந்த படப் பிரிவில் ஆஸ்கார் விருதைப் பெற்றது.
இது அந்த திரைப்படத்துக்கான ஐந்தாவது வெற்றியைக் குறிக்கிறது.
சிறந்த படத்திற்கான விருது மட்டுமின்றி, சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை அனோராவுக்காக மைக்கி மேடிசன் வென்றார்.
அதோடு சிறந்த இயக்குனருக்கான விருதை இப்படத்தை இயக்கிய சீன் பேக்கர் வென்றார்.
தொடர்ச்சியாக மூன்று பிரிவுகளில் இப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட, அரங்கமே அதிர்ந்தது.
இது தவிர, சிறந்த எடிட்டிங், சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்கான விருதையும் வென்றது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#OscarsUpdate | 97வது ஆஸ்கர் விழாவில் சிறந்த திரைப்படமாக அனோரா..!
— Sun News (@sunnewstamil) March 3, 2025
சிறந்த திரைக்கதை, படத்தொகுப்பு, இயக்குநர், நடிகை, திரைப்படம் என மொத்தமாக 5 விருதுகளை குவித்துள்ளது அனோரா#SunNews | #Anora | #Oscars2025 pic.twitter.com/6FVyY7iMbx
விவரங்கள்
Anora படத்தை பற்றிய விவரங்கள்
புரூக்ளின் பாலியல் தொழிலாளியைப் பற்றிய சீன் பேக்கரின் திரைப்படம் அனோரா.
இப்படத்தில் ரஷ்ய நாடகப் பெண்ணை மணக்கும் நடனக் கலைஞராக மைக்கி மேடிசன் நடித்திருந்தார்.
ஒரு ரஷ்ய நாடகப் பெண்மணியை அவசரமாக திருமணம் செய்து கொள்ளும் ஒரு நடனக் கலைஞரைப் பற்றிய காதல்/திரில்லர் படமான Anora உலக அரங்கில் இந்தாண்டின் சிறந்த படமாக பார்க்கப்படுகிறது.
இது பேக்கரின் எட்டாவது திரைப்படமாகும்.
இப்படம் பல பிரிவுகளில் தி ப்ரூடலிஸ்ட், எமிலியா பெரெஸ் மற்றும் விக்கெட் போன்ற பிரபல படங்களுடன் போட்டியிட்டு 5 பிரிவுகளில் வெற்றி பெற்றுள்ளது.