அனிருத் - காவ்யா மாறன் திருமணம்: இருவரின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியின் உரிமையாளர்களில் ஒருவரான காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் வரும் நவம்பர் 11-ஆம் தேதி கிரீஸ் நாட்டில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள நிலையில், இதற்கான முன்னேற்பாடுகளைப் பெண் வீட்டார் தரப்பான கலாநிதி மாறன் குடும்பத்தினர் தீவிரமாகக் கவனித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, நவம்பர் 21-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறைப் பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர்.
சொத்துமதிப்பு
கூட்டு சொத்து மதிப்பு விவரம்
இவர்களது திருமணம் குறித்த தகவல்களைத் தொடர்ந்து, இருவரின் சொத்து மதிப்பு குறித்த ஆர்வம் ரசிகர்களிடையே பெருமளவில் எழுந்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற வார்விக் பிசினஸ் ஸ்கூலில் எம்.பி.ஏ. பட்டம் பெற்ற காவ்யா மாறனின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் ரூ. 409 கோடி ஆகும்.
அதேபோல், இந்தியத் திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத்தின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 60 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இவர்களது கூட்டுச் சொத்து மதிப்பு ரூ. 469 கோடியாக உள்ளது. வணிக ஆளுமையும் திரைக்கலை சாதனைகளும் இணையும் இந்தத் திருமணம், இருவரது வாழ்க்கையிலும் புதிய அத்தியாயமாக அமையவுள்ளது.
திருமண வரவேற்பு
கிரீஸ் திருமணம் & சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு
கிரீஸ் நாட்டில் நவம்பர் 10, 11 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்தத் திருமண விழாவிற்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே தனிப்பட்ட முறையில் தகவல் தெரிவிக்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவர்களின் திருமணத்திற்காக தனி சார்ட்டர் விமானம் மூலம் நெருங்கிய உறவினர்கள் கிரீஸிற்கு பயணப்பட உள்ளனர்.
அதில் திமுக தலைவரும், குடும்பத்தின் மூத்த தலைவருமான மு.க.ஸ்டாலின் குடும்பத்தாரும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பத்தாரும், மற்றும் நெருங்கிய உறவினர்களும் பயணப்பட உள்ளனர்.
இது தவிர சன் டிவி குழுமத்தினருக்கென தனியாக ஒரு வரவேற்பு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ITC ஹோட்டலில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சி அல்லாமல் ப்ரெத்யேகமாக சன் டிவி மற்றும் சன் பிக்ச்சர்ஸ் தொழிலாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்காக ஏற்பாடு செய்யப்படுகிறது.