Page Loader
ஆண்ட்ரியா தயாரிப்பாளராக அறிமுகம் ஆகும் 'மாஸ்க்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
'மாஸ்க்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஆண்ட்ரியா தயாரிப்பாளராக அறிமுகம் ஆகும் 'மாஸ்க்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

எழுதியவர் Venkatalakshmi V
Feb 26, 2025
11:25 am

செய்தி முன்னோட்டம்

நடிகர் கவின் மற்றும் ஆண்ட்ரியா நடிக்கும் 'மாஸ்க்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் பூஜையுடன் தொடங்கிய இந்த படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் மூலம் சினிமாவில் தயாரிப்பாளராகவும் களமிறங்குகிறார் நடிகை ஆண்ட்ரியா. விக்ரம் அசோகன் இயக்கும் இந்தப் படத்தினை ஆரம்பத்தில் இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பதாக இருந்தது. தற்போது இணை தயாரிப்பாளராக ஆண்ட்ரியாவும் களமிறங்கியுள்ளார். இப்படத்தில் கவின் மற்றும் ஆண்ட்ரியாவைத் தவிர, கார்லி, பாலா சரவணன், ருஹானி சர்மா, வி.ஜே. அர்ச்சனா மற்றும் பலர் படத்தில் நடிக்க உள்ளனர். 'மாஸ்க்' படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் ஒளிப்பதிவு ஆர்.டி. ராஜசேகர், படத்தின் கலை இயக்குனர் ஜாக்கி.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post