Page Loader
நடிகை சமந்தாவிற்கு கோவில் கட்டும் ஆந்திரா இளைஞர்!
நடிகை சமந்தா ரூத் பிரபுவிற்கு, ஆந்திரா இளைஞர் ஒருவர் கோவில் கட்டி வருகிறார்

நடிகை சமந்தாவிற்கு கோவில் கட்டும் ஆந்திரா இளைஞர்!

எழுதியவர் Venkatalakshmi V
Apr 27, 2023
11:16 am

செய்தி முன்னோட்டம்

நடிகை சமந்தா ரூத் பிரபு தற்போது தெலுங்கு, தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி, தற்போது ஹிந்தி மற்றும் ஆங்கில சீரிஸ்களில் நடித்து கொண்டிருக்கிறார். 'சென்னை பொண்ணு' என தமிழ் ரசிகர்கள் பெருமையாக கொண்டாடும் சமந்தா, அவரின் படங்களின் மூலமும், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை அவர் தைரியமாக கையாளும் விதத்திலும், பல ரசிகர்களை ஈர்த்துள்ளார். அந்த வரிசையில், சமந்தாவின் நடிப்பில் மயங்கி, ஆந்திராவை சேர்ந்த தெனாலி என்பவர், சமந்தாவிற்கு கோவில் கட்டி வருகிறார். இதுகுறித்து அந்த ரசிகர், "சமந்தாவின் படங்கள் மட்டுமல்ல, அவர் தனது அறக்கட்டளையான பிரத்யுஷா அறக்கட்டளையின் மூலம் செய்யும் தொண்டுப் பணிகளுக்காகவும் அவரை ரசிக்கிறேன்" என்று கூறினார். அந்த ரசிகர், தனது வீட்டில் ஒரு பாகமாக கோவிலை திறக்கவுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

சமந்தாவிற்கு கோவில்