விருந்தினர்களுக்கு ரூ.1.5 கோடி மதிப்புள்ள கடிகாரங்களை பரிசாக வழங்கினார் ஆனந்த் அம்பானி
செய்தி முன்னோட்டம்
குறிப்பிட்ட விருந்தினர்களுக்கும் ஆனந்த் அம்பானி ஆடம்பரமான கடிகாரங்களை பரிசளித்துள்ளார்.
அந்த கடிகாரங்கள் ஒவ்வொன்றும் சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ளதாகும்.
மேலும் அவை அம்பானிகளால் விருந்தினர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
Audemars Piguet என்ற நிறுவனத்தின் லிமிடெட் எடிஷன் மாடல்கள் இதுவாகும்.
இது அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் பிரமாண்ட திருமணத்தில் அம்பானிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட விருந்தினர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது.
ஷாருக்கான், மீசான் மற்றும் பிற மாப்பிள்ளை தோழர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது.
அம்பானி திருமணம்
அம்பானி பரிசளித்த கடிகாரத்தின் அம்சங்கள்
மேலும், மாப்பிள்ளை தோழர்கள் இந்த கடிகாரங்களை அணிந்து ஒரு வீடியோவையும் வெளியோடுள்ளனர்.
அனந்த் அம்பானி பரிசளித்த கடிகாரத்தில் 41 மிமீ 18கே பிங்க் தங்கப் பெட்டி, 9.5 மிமீ தடிமன், நீலக்கல் படிக பின்புறம் மற்றும் திருகு பூட்டப்பட்ட கிரீடம் ஆகியவை உள்ளன.
இது கிராண்டே டேபிஸ்ஸரி பேட்டர்ன், ப்ளூ கவுண்டர்கள், பிங்க் கோல்ட் ஹவர் மார்க்கர்கள் மற்றும் ஒளிரும் பூச்சுடன் கூடிய ராயல் ஓக் கைகள் கொண்ட இளஞ்சிவப்பு தங்க நிற டயலைக் கொண்டுள்ளது.
வீடியோவின் படி, ரன்வீர் சிங், ஷிகர் பஹாரியா மற்றும் வீர் பஹாரியா ஆகியோரும் இந்த கடிகாரங்களை பரிசாக பெற்றுள்ளனர்.