
தெலுங்கு திரையுலகில், முதல் 'சிறந்த நடிகர்'-க்கான தேசிய விருதை வென்றுள்ளார் அல்லு அர்ஜுன்
செய்தி முன்னோட்டம்
இன்று அறிவிக்கப்பட்ட 69 வது தேசிய விருதுகளில், சிறந்த நடிகருக்கான விருதை, 'புஷ்பா' படத்தில் நடித்ததற்காக, நடிகர் அல்லு அர்ஜுன் வென்றுள்ளார்.
சென்ற ஆண்டு மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுகுமார் இயக்க வெளியான திரைப்படம் தான் 'புஷ்பா'. அதில் கதாநாயகனாக நடித்திருந்தார் அல்லு அர்ஜுன்.
அவரின் சிறந்த நடிப்பிற்காக தேசிய விருது கிடைத்தாலும், மற்றுமொரு சிறப்பாக, தெலுங்கு திரையுலகில், சிறந்த நடிகர் என தேசிய விருதை வென்ற முதல் நடிகரானர் அவர்.
இதற்கு முன்னர் NTR , நாகேஸ்வர ராவ் என பல ஜாம்பவான்கள் தெலுங்கு திரைத்துறையில் இருந்திருந்தாலும், அவர்கள் யாரும் நடிப்பிற்காக தேசிய விருது பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
அல்லு அர்ஜுன் தேசிய விருது வென்றதை கொண்டாடும் படக்குழு
Maverick director @aryasukku and our producers #NaveenYerneni garu and #RaviShankar garu shower their happiness and love on Icon Star @alluarjun for becoming THE FIRST ACTOR FROM TFI to win the BEST ACTOR at the National Awards ❤️#Pushpa ❤️🔥#ThaggedheLe pic.twitter.com/RvxX7NbKnM
— Mythri Movie Makers (@MythriOfficial) August 24, 2023