Page Loader
மகள் ரஹாவின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து திடீரென நீக்கிய ஆலியா பட்; என்ன காரணம்?
மகள் ரஹாவின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து திடீரென நீக்கிய ஆலியா பட்

மகள் ரஹாவின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து திடீரென நீக்கிய ஆலியா பட்; என்ன காரணம்?

எழுதியவர் Venkatalakshmi V
Mar 01, 2025
03:30 pm

செய்தி முன்னோட்டம்

பாலிவுட் நடிகை ஆலியா பட் தனது மகள் ரஹாவின் அனைத்து படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து நீக்கியுள்ளார். இந்த நடவடிக்கை சமூக ஊடக தளங்களில் விவாதங்களைத் தூண்டியுள்ளது. மேலும் பல பயனர்கள் இந்த முடிவின் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து ஊகிக்கின்றனர். பிரமாண்டமான ஜாம்நகர் விருந்து மற்றும் அவர்களின் பாரிஸ் பயணத்தின் படங்கள் உட்பட , தனது மகளின் முகத்தை வெளிப்படுத்தும் அனைத்து படங்களையும் ஆலியா இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியுள்ளார். சமீபத்தில் ஒரு இல்ல நிகழ்விற்கு கிளம்புகையில், அலியா பட் நிருபர்களிடம் தனியே வந்து குழந்தையை புகைப்படம் எடுக்கவேண்டாம் என கோரிக்கை வைத்து நினைவிருக்கலாம்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

எதிர்வினை

தனியுரிமை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக புகைப்படத்தை நீக்கியிருக்கக்கூடும்

(Reddit)ரெடிட்டில் பரவி வரும் ஒரு யூகத்தின்படி, இந்த முடிவு சமீபத்தில் சைஃப் அலி கானின் தாக்குதல் தொடர்பான ஒரு சம்பவத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். இருப்பினும், புகைப்படங்களை நீக்குவது குறித்து ஆலியா பட்டிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் இல்லை. சில ரெடிட் பயனர்கள் ஆலியாவின் இந்த நடவடிக்கையை ஆதரித்து, "ஒரு பெற்றோராக, அவர் ஒரு பாதுகாப்பு நடவடிக்கை என்று நினைப்பதைச் செய்ய வேண்டும் (sic)," "நல்ல முடிவு (sic)," மற்றும் "நேர்மையாகச் சொன்னால், ஒரு நல்ல முடிவு" என்றும் கருத்து தெரிவித்தனர்.