அடுத்த செய்திக் கட்டுரை

"AK Moto Ride" என்ற மோட்டார்சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கியுள்ள நடிகர் அஜித்குமார்!
எழுதியவர்
Arul Jothe
May 22, 2023
06:16 pm
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் அஜித்குமார்.
அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் "விடாமுயற்சி" படத்தில் நடிக்கவிருக்கிறார்.
கார் பைக் ரேஸிலும் அதீத ஆர்வம் கொண்ட அஜித் இந்தப் படத்திற்கு பிறகு உலக மோட்டார் பைக் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
தற்போது சர்வதேச அளவில் பைக் பயணத்தில் ஈடுபட்டுள்ள அவர், AK MOTO RIDE என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
"வாழ்க்கை ஒரு அழகான பயணம்" என்று குறிப்பிட்டு, அழகான சர்வதேச சாலைகளில் பயணம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கு சுற்றுப்பயணங்களை வழங்கவுள்ளதாக அஜித் கூறியுள்ளார்.
இந்த தனிப்பட்ட அறிவிப்பை அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
அஜித்தின் அறிக்கை
Discipline makes life easier#AKMOTORIDE pic.twitter.com/wf5kZHMVdt
— Suresh Chandra (@SureshChandraa) May 22, 2023