
அஜித்குமார் நடிக்கும் 'விடாமுயற்சி' திரைபடத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குவதாக அறிவிப்பு!
செய்தி முன்னோட்டம்
கோலிவுட்டின் பிரபல நடிகர் அஜித் குமார் இயக்குனர் மகிழ் திருமேனியுடன் தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார்.
மேலும் படம் அதிகாரப்பூர்வமாக நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
'ஏகே 62' படத்திற்கான செட் வேலைகள் தற்போது சென்னையில் நடைபெற்று வருகின்றன.
'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு, ஜூன் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் இந்த படத்திற்கு அஜித் ஸ்டைலான மற்றும் ஃபிட் லுக்கில் நடிக்கவுள்ளார்.
மேலும் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்கள்.
படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை, அஜித்துடன் புதிய நட்சத்திரங்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
'விடாமுயற்சி’ - புதிய அப்டேட்#Vidamuyarchi | #Thala | #AK | #AjithKumar | @SureshChandraa | #Cinema | #News7Tamil pic.twitter.com/6DdCOO5Uxy
— News7 Tamil (@news7tamil) May 16, 2023