"புலிக்கு பிறந்தது பூனையாகாது" கால்பந்து விளையாட்டில் கலக்கும் அஜித்குமாரின் மகன் ஆத்விக்!
தென்னிந்தியாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் அஜித் குமாருக்கு பைக்கில் பயணம் மேற்கொள்வது மிகவும் பிடித்தமான விஷயம். அதற்கு ஏற்றார் போல சமீபத்தில் AK MOTOR RIDE என்ற இரு சக்கர வாகன சுற்றுலா நிறுவனத்தை தொடங்குவதாக அறிவித்தார். அஜித் எப்படி வித்தியாசமாக திகழ்கிறாரோ அதே போல அவரது மனைவி மற்றும் நடிகையுமான ஷாலினி பாட்மிண்டனில் கலக்கி வந்தார். மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டிகளில் வெற்றியும் பெற்றார். தற்போது அவர்களது மகனான ஆத்விக்கின் திறமையை பார்த்து ரசிகர்கள் வியப்பில் உள்ளனர். சென்னை கால்பந்து கிளப் குழுவில் ஜூனியர் பிரிவில் ஆத்விக் சிறப்பான பங்களிப்பை அளித்து விளையாடி வருகிறார். ஆத்விக் கால்பந்து பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது