LOADING...
ஜிவி இசையில் அனிருத் வாய்ஸ்; குட் பேட் அக்லியின் இரண்டாம் பாடலுக்கான புரோமோ வெளியானது

ஜிவி இசையில் அனிருத் வாய்ஸ்; குட் பேட் அக்லியின் இரண்டாம் பாடலுக்கான புரோமோ வெளியானது

எழுதியவர் Sekar Chinnappan
Mar 29, 2025
06:11 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் அஜித் குமாரின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தின் இரண்டாவது பாடலுக்கான புரோமோவை சனிக்கிழமை (மார்ச் 29) வெளியிட்டுள்ளனர். முன்னதாக, புரோமோ மாலை 5.50 மணிக்கு வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் புரோமோவுக்கு ஒரு புரோமோ வெளியிட்டிருந்தது. இந்நிலையில், அதில் கூறியபடி, சரியான நேரத்தில் இரண்டாவது சிங்கிள் பாடலுக்கான அறிவிப்பை வெளியிட்ட படக்குழு, இந்த பாடல் ஞாயிற்றுக் கிழமை வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், இந்த பாடலை அனிருத் பாடியுள்ளதையும் வெளிப்படுத்தி உள்ளது.

ஏப்ரல் 10 

ஏப்ரல் 10 அன்று படம் ரிலீஸ்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகியுள்ள இந்தப் படம், அஜித்தின் முந்தைய படமான விடா முயற்சியைத் தொடர்ந்து வருகிறது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடமிருந்து நேர்மறையான வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் த்ரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு, டாம் சாக்கோ மற்றும் அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுமார் ₹250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், குட் பேட் அக்லியின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளிவரும் என்பதால் அஜித் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

படக்குழுவின் அப்டேட்