LOADING...
மாமே வைப் ஏத்து; நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லியின் இரண்டாவது பாடல் காட் பிளஸ் யு வெளியானது

மாமே வைப் ஏத்து; நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லியின் இரண்டாவது பாடல் காட் பிளஸ் யு வெளியானது

எழுதியவர் Sekar Chinnappan
Mar 30, 2025
07:07 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லியின் இரண்டாவது பாடலான காட் பிளெஸ் யூ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது பாடலும் அதே போல் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் விடாமுயற்சிக்குப் பிறகு அஜித்தின் அடுத்த படமாகும். இந்தப் படத்தை புஷ்பா படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.

நடிகர்கள்

படத்தில் நடித்துள்ள நடிகர்கள்

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்த இந்த படத்தில், த்ரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு, டாம் சாக்கோ மற்றும் அவினாஷ் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். ₹250 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. முன்னதாக, இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியீட்டிற்கு முன்னதாக, ஒரு புரோமோ டீசர் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. மேலும், அந்த புரோமோவுக்கும் ஒரு புரோமோ வெளியிட்டு அதில் பாடகர் யார் என்று யூகிக்க தயாரிப்பு நிறுவனம் ரசிகர்ளிடம் கூறி, எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தது. இந்நிலையிவ், தற்போது காட் பிளஸ் யு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டவுடன், இது வலுவான நேர்மறையான வரவேற்பைப் பெற்றுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

இரண்டாவது பாடல்