விபத்திற்குள்ளான நடிகர் அஜித்தின் ரேஸ் கார்... பதற வைக்கும் வீடியோ
செய்தி முன்னோட்டம்
துபாய் கிராண்ட் பிரிக்ஸ் போட்டிக்கு முன்னதாக நடந்த பயிற்சியின் போது நடிகர் அஜித் குமாரின் கார் விபத்துக்குள்ளானது.
கூர்மையான திருப்பங்கள் மற்றும் சுழல்களின் போது அவரது காரின் முன்பகுதி சேதமடைந்தாலும், அஜித் காயமின்றி வாகனத்திலிருந்து வெளியேறியதை அந்த வீடியோவில் காண முடிந்தது.
எனினும் இது அவரின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை அஜித்தின் பந்தயக் குழுவின் சமூகவலைத்தள பக்கம் பகிர்ந்து கொண்டது.
அந்த பதிவில் இது பயிற்சி அமர்வின் ஒரு பகுதி எனவும் தெரிவித்துள்ளது.
"அஜித் குமாரின் பயிற்சியில் பெரும் விபத்து ஏற்பட்டது, ஆனால் அவர் காயமடையாமல் விலகிச் செல்கிறார்....அது பந்தயம்!"
ஜனவரி 9-ம் தேதி தொடங்க உள்ள துபாய் கிராண்ட் பிரிக்ஸ் போட்டிக்கு அஜித் குமார் குழு தயாராகி வருகிறது.
embed
Twitter Post
Ajith Kumar's massive crash in practise, but he walks away unscathed. Another day in the office ... that's racing!#ajithkumarracing #ajithkumar pic.twitter.com/dH5rQb18z0— Ajithkumar Racing (@Akracingoffl) January 7, 2025