
'நான் ரெடி தான்' பாடலுக்கு ஏஜென்ட் டீனாவுடன், எல்சா தாஸ் ஆட்டம்
செய்தி முன்னோட்டம்
LCU என்றழைக்கப்படும் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்சில், அனைத்து கதாபாத்திரங்களும் ஏதேனும் ஒரு வகையில் தொடர்புபடுத்தப்பட்டிருக்கும்.
அந்த வகையில், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடங்கி தற்போது லியோ வரை நான்கு படங்களின் கதாபாத்திரங்களும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டு திரைக்கதையாக உருவெடுத்திருந்தது.
'லியோ' படத்தின் ஷூட்டிங் தொடங்கிய போது, அப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக நடன இயக்குனரும், 'விக்ரம்' படத்தில் 'ஏஜென்ட் டீனா' என்ற கதாபாத்திரத்தில் நடித்தவருமான வசந்தி, ஏர்போர்ட்டில் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலானது.
பலரும், 'ஏஜென்ட் டீனா' கதாபாத்திரம், லியோ படத்திலும் இடம்பெறும் என்றும், லியோ திரைப்படம் 'விக்ரம்' படத்தின் முன்கதையாக இருக்குமெனவும் பல கதைகளை கூறினர்.
card 2
LCU வில் இணைந்த லியோ; ஆனால் டீனா மிஸ்ஸிங்!
லியோ திரைப்படம் வெளியானதும், பலரும் இது LCU -வில் எப்படியெல்லாம் தொடர்பு கொண்டுள்ளது என பலவகையில் யோசிக்க தொடங்கிய இந்த நேரத்தில், லியோ திரைப்படத்தில், விஜயின் சகோதரியாக, எல்சா தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த மடோனா செபாஸ்டின், 'ஏஜென்ட் டீனா'-வுடன், 'நான் ரெடி தான்' பாடலுக்கு ரீஹெர்சல் செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஆம், இந்த படத்தில், 'ஏஜென்ட் டீனா', நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
தினேஷ் குமார் நடன இயக்குனராக இப்படத்தில் பணியாற்றியுள்ளார். அவருடன், நடன இயக்குனர் வசந்தியும் பணிபுரிந்துள்ளார்.
இந்த பாடல், வெளியானதில் இருந்து தற்போது வரை பல லட்சம் வியூஸ்களை பெற்று சாதனை புரிந்து வருகிறது. அனிருத் இசையில் மற்றுமொரு சூப்பர்ஹிட் பாடல் இந்த பாடல்.
ட்விட்டர் அஞ்சல்
ஏஜென்ட் டீனாவுடன், எல்சா தாஸ் ஆட்டம்
Elisa Das #NaaReady Dance Rehearsal With Agent Tina💃@MadonnaSebast14 #LEO pic.twitter.com/W7BOxBAmuF
— Arun Vijay (@AVinthehousee) October 30, 2023