LOADING...
சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை 'தி ப்ரூடலிஸ்ட்' ஹீரோ அட்ரியன் பிராடி வென்றார்
சிறந்த நடிகருக்கான விருதை 'தி ப்ரூடலிஸ்ட்' ஹீரோ அட்ரியன் பிராடி வென்றார்

சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை 'தி ப்ரூடலிஸ்ட்' ஹீரோ அட்ரியன் பிராடி வென்றார்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 03, 2025
08:59 am

செய்தி முன்னோட்டம்

'தி ப்ரூடலிஸ்ட்' திரைப்படத்தில் நடித்ததற்காக அட்ரியன் பிராடி சிறந்த நடிகருக்கான அகாடமி விருதை வென்றுள்ளார். முன்னதாக 2003 ஆம் ஆண்டில், தி பியானிஸ்ட் திரைப்படத்தில் நடித்ததற்காக 29 வயதில் அவர் ஆஸ்கார் விருதை வென்ற போது, ​​ஆஸ்கார் விருதை வென்ற இளையவர் என்ற பெருமையையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இது அவருடைய இரண்டாவது ஆஸ்கார் விருதாகும். தி ப்ரூடலிஸ்ட் திரைப்படத்தில், பிராடி லாஸ்லோ டோத் என்ற கற்பனையான ஹங்கேரிய நவீனத்துவ கட்டிடக் கலைஞராக அவர் நடித்திருந்தார். அவர் இரண்டாம் உலகப் போரில் இருந்து தப்பிப்பிழைத்து, அதன் வதை முகாம்கள் வழியாக அமெரிக்காவை சென்றடையும் கதாபாத்திரமாக அவர் வாழ்ந்திருந்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விருதுகள் பட்டியல்

சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசைக்கும் விருது

வெல்ஷ் கலைஞர் லோல் க்ராலி, வரலாற்று திரைப்படமான 'தி ப்ரூடலிஸ்ட்'டில் தனது பணிக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான அகாடமி விருதை வென்றார். வெறும் 33 நாட்களில் $10 மில்லியன் பட்ஜெட்டில் படமாக்கப்பட்ட தி ப்ரூடலிஸ்ட், டேனியல் ப்ளம்பெர்க் இசையமைத்த சிறந்த அசல் இசைக்கான (Music (Original Score)) அகாடமி விருதையும் வென்றது. 'விக்டு,' 'கான்க்ளேவ்,' 'எமிலியா பெரெஸ்,' மற்றும் 'தி வைல்ட் ரோபோட்' ஆகியவையும் இந்தப் போட்டிப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டன. இந்த காவிய கால நாடகத் திரைப்படத்தை பிராடி கார்பெட் இயக்கி தயாரித்தார்.