Page Loader
மெகா கூட்டணியில் இணைந்த நடிகை அதிதி ஷங்கர்! 
புதிய படத்தில் இணைந்த நடிகை அதிதி ஷங்கர்

மெகா கூட்டணியில் இணைந்த நடிகை அதிதி ஷங்கர்! 

எழுதியவர் Siranjeevi
Apr 19, 2023
06:58 pm

செய்தி முன்னோட்டம்

கோலிவுட் சினிமாவில் விருமன் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். இதனைத்தொடர்ந்து, இவர் சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த நிலையில், முண்டாசுப்பட்டி, ராட்சசன் படத்தை இயக்கிய ராம்குமாரின் படத்தில் அதிதி ஷங்கர் இணைந்துள்ளார். தற்போது மெகா கூட்டணியில் உருவாகும் இப்படம் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கிறார். விஷ்ணு விஷாலுக்கு இப்படம் இது 21 வது திரைப்படமாகும். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆனது வரும் மே மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளனர். படத்தின் டெஸ்ட் ஷூட் சென்னையில் நடைப்பெற்றுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post