Page Loader
ஆதிபுருஷ் வெளியாகும் திரையரங்குகளில், ஹனுமானுக்கு ஒரு சீட்! தயாரிப்பாளர்களின் வினோத அறிவிப்பு 
தயாரிப்பாளர்களின் இந்த அறிவிப்பு இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது

ஆதிபுருஷ் வெளியாகும் திரையரங்குகளில், ஹனுமானுக்கு ஒரு சீட்! தயாரிப்பாளர்களின் வினோத அறிவிப்பு 

எழுதியவர் Venkatalakshmi V
Jun 06, 2023
03:10 pm

செய்தி முன்னோட்டம்

'பாகுபலி' படத்தின் மூலம், இந்தியா முழுவதும் பிரபலமடைந்த நடிகர் பிரபாஸ். தொடர்ந்து அவர், பான் இந்தியா படமாக உருவாகி வரும் 'ஆதிபுருஷ்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்த திரைப்படத்தை இயக்கி இருப்பவர் ஓம் ராவத் என்ற பாலிவுட் இயக்குனர். இந்த திரைப்படத்தில் ராமனாக பிரபாஸ் நடித்துள்ளார். சென்ற பிப்ரவரி மாதமே வெளியாகவேண்டிய திரைப்படம், VFX வேலைகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, வரும் ஜூன் 16 ஆம் தேதி, இந்தியா முழுவதும் 5 மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் தயாரிப்பு குழு நேற்று ஒரு வினோத அறிவிப்பை வெளியிட்டது. அதில்,'ஆதிபுருஷ்' திரைப்படம் வெளியாகும் அனைத்து திரையரங்குகளிலும், 'ஹனுமான்'னுக்கு என்று தனி இருக்கை விடபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

ஹனுமானுக்கு ஒரு சீட்!