
நியூயார்க் டைம்ஸ் குறுக்கெழுத்து புதிரில் இடம்பிடித்த நடிகை த்ரிஷா
செய்தி முன்னோட்டம்
தென்னிந்திய நடிகை த்ரிஷா சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் குறுக்கெழுத்து புதிரில் தனது பெயர் இடம்பெற்றிருந்ததை கண்டறிந்தார். இதனை அவர் தனது இன்ஸ்டா பக்கத்திலும் பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டார்.
ஒரு இந்திய திரைப்பட நட்சத்திரத்திமாக இது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
தி நியூயார்க் டைம்ஸ் குறுக்கெழுத்து புதிரில் "தென்னிந்திய சினிமாவின் நடிகை கிருஷ்ணன்" என க்ளூ தரப்பட்டிருந்தது. குறுக்கெழுத்தில், "த்ரிஷா" என்ற பதிலும் இடம்பெற்றிருந்தது.
இது த்ரிஷாவின் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனை நடிகை சமந்தாவும் பகிர்ந்துள்ளார்.
த்ரிஷா, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்.
தொழில் ரீதியாக, த்ரிஷா அடுத்து அஜித் குமாரின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி, கமல்ஹாசனின் தக் லைஃப் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Trisha made it into the prestigious New York Times crossword puzzle, which is quite an achievement!
— George 🍿🎥 (@georgeviews) November 4, 2024
Her friend and fellow actress #Samantha shared the news, sweetly calling Trisha a "queen" in her post.
Nice to see the camaraderie between both actresses! pic.twitter.com/qPQpEykv5k