பிறந்தநாள் ஸ்பெஷல்: நடிகை சமந்தா மாஸ் காட்டிய தருணங்கள்
செய்தி முன்னோட்டம்
நடிகை சமந்தா ரூத் பிரபு இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சமந்தா, ஒரு நடிகையாக மட்டுமல்லாமல், தைரியத்துடன் போராடும் ஒரு பெண்ணாக பலரையும் ஈர்த்துள்ளார்.
அவர் மேல் வீசப்படும் அவதூறுகளையும், 'பெண்கள் இப்படி தான் இருக்க வேண்டும்' என குறை சொல்லும் சமூகத்தின் முன்பும், அவரது உடல்நலனில் ஏற்பட்ட சரிவையும், எதிர்கொண்டு, 'My Life , My Rules' என்பது போல கெத்தாக வாழ்ந்து வருகிறார்.
பலருக்கும் இன்ஸ்பிரஷனாக, சினிமாவிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் கெத்து காட்டும் சமந்தா, விடாமுயற்சியின் மூலமும், தன்னுடைய உழைப்பின் மூலமும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி படவுலகம் மட்டுமின்றி, தற்போது ஹாலிவுட் படத்திலும் நடிக்கவிருக்கிறார்.
card 2
விவாகரத்திற்கு பின்னர் ட்ரோல் செய்யப்பட்ட சமந்தா
'நாக சைதன்யாவுடன் விவாகரத்து' என அறிவித்ததும், பலரும் அவர் பணத்திற்காக விவாகரத்து செய்தார் என கூறினார்கள். ஆனால், ஜீவனாம்சமாக எதுவுமே வேண்டாம் என்றும், சொந்த உழைப்பில், நல்ல நிலைமையில் இருப்பதாகவும், அதை மறுத்துவிட்டார்.
'ஊ சொல்றியா' பாடலில் அதீத கவர்ச்சி காட்டி இருப்பதாக சிலர் அவரை ட்ரோல் செய்தனர். விவாகரத்து பெற்றதால், மார்க்கெட் போய்விட்டதென்றும், அதனால் ஐட்டம் பாடலுக்கு நடனமாட துவங்கி விட்டார் என்றும் கூறியவர்களுக்கு, 'கவர்ச்சியாக தோன்றுவதற்கு கூட கூடுதல் உழைப்பு தேவைப்படும்' என்று கூறி, மாஸ் காட்டினார்.
'சூப்பர் டீலக்ஸ்', 'தி பேமிலி மேன்', போன்ற படங்களில் அவர் தேர்வு செய்த வேடங்கள் பொதுவாக எந்த நடிகையும் நடிக்க தயங்கும் கதாபாத்திரங்கள்.