
சின்னத்திரையில் ரீ-என்ட்ரியாகும் ரம்யா கிருஷ்ணன்
செய்தி முன்னோட்டம்
நடிகை ரம்யா கிருஷ்ணன் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் சீரியல்களில் நடிக்கிறார்.
சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார்.
ஜீ தமிழில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'நளதமயந்தி' என்ற தொடரில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாக தகவல் வெளியானது.
தற்போது அத்தொடரின் முன்னோட்ட காட்சியும் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ரம்யா கிருஷ்ணன், அம்மன் வேடத்தில் வருகிறார். நளதமயந்தி தொடர், வரும் அக்டோபர் 9ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.
நடிகை ரம்யா கிருஷ்ணன் ஏற்கனவே தங்கம், ராஜகுமாரி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ரோஜா' சீரியல் மூலம் பிரபலமான பிரியங்கா நல்காரி இத்தொடரில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ட்விட்டர் அஞ்சல்
ஜீ தமிழ் தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முன்னோட்டம்
அக்டோபர் 9 முதல் | நளதமயந்தி. #NalaDamayanthi #NewSerial #RamyaKrishnan #PriyankaNalkari #Nanda #ZeeTamilpromo #promo #ZeeTamil @meramyakrishnan pic.twitter.com/VwfzLcAzPX
— Zee Tamil (@ZeeTamil) September 28, 2023