'வெல்கம் ப்ரியாமணி': தளபதி 69இல் ப்ரியாமணி இணைவதை அறிவித்த படக்குழு
விஜய்யின் தளபதி 69இல் நடிகை ப்ரியாமணி நடிக்கிறார். இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் ப்ரியாமணி முதல்முறையாக விஜய் உடன் இணைகிறார். பருத்திவீரன் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வென்ற ப்ரியாமணி, நிச்சயம் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கவே ஒப்பந்தமாகி இருப்பார் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். நடனம், நடிப்பு என இரண்டிலும் ப்ரியாமணி கலக்குபவர். அதனால் தளபதி 69இல் அவருடைய கதாபாத்திரம் எத்தகையதாக இருக்கும் என இப்போதே பலரும் ஆவலுடன் காத்துள்ளனர். தளபதி-69 திரைப்படம் விஜய்யின் கடைசி திரைப்படமாக இருப்பதால், இப்படத்தில் நடிகர் நடிகையர் பட்டாளம் அதிகமாகவே உள்ளது. இதுவரை பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.