நீண்ட நாள் காதலரான ராஜ்வேலை கரம் பிடித்தார் நடிகை பிரியா பவானி சங்கர்
செய்தி முன்னோட்டம்
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையான பிரியா பவானி சங்கர், தனது நீண்ட நாள் காதலரான ராஜ்வேலை இன்று கரம் பிடித்தார். இவர்களின் திருமணம் மிக எளியமுறையில் குடுமபத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் இன்று நடைபெற்றது. செய்தி வாசிப்பாளராகத் தொடங்கி, சின்னத்திரையில் கலக்கி, தற்போது வெள்ளித்திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் பிரியா பவானி சங்கர், சினிமாவில் நுழைவதற்கு முன்பிருந்தே கல்லூரி காலத்திலிருந்தே ராஜ்வேலை 10 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தார். இவர்களது திருமண வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் பரவி வருகின்றன.
வாழ்த்து மழை
சின்னத்திரை முதல் பாக்ஸ் ஆபீஸ் நாயகி வரை
விஜய் தொலைக்காட்சியின் 'கல்யாணம் முதல் காதல் வரை' மெகா தொடர் மூலம் தமிழக மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட பிரியா, இயக்குநர் ரத்னகுமாரின் 'மேயாத மான்' திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், திருச்சிற்றம்பலம், பத்து தல, இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் ₹100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டிய இருமுடி என அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
விரைவில் வெளியாகவுள்ள டிமான்டி காலனி 3 மற்றும் இந்தியன் 3 ஆகிய படங்களிலும் அவர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.
10 ஆண்டுகால காதலை இல்லற பந்தமாக மாற்றிய புதுமணத் தம்பதியினருக்குத் திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் போட்டி போட்டுக் கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
PriyaBhavani Shankar got married today 💍 pic.twitter.com/lilOHQESbl
— Kolly Censor (@KollyCensor) November 11, 2026