Loading...
நீண்ட நாள் காதலருடன் விரைவில் திருமணம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்த நடிகை பிரியா பவானி சங்கர்
நீண்ட நாள் காதலருடன் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக அறிவித்த நடிகை பிரியா பவானி சங்கர்

நீண்ட நாள் காதலருடன் விரைவில் திருமணம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்த நடிகை பிரியா பவானி சங்கர்

எழுதியவர் Vasuki
Nov 10, 2026
05:34 pm

செய்தி முன்னோட்டம்

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, சின்னத்திரையில் கலக்கி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை பிரியா பவானி சங்கர், தனது நீண்ட நாள் காதலரான ராஜவேலுவை விரைவில் கரம் பிடிக்கவுள்ளார். தனது கல்லூரித் தோழரான ராஜவேலுவை பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாள்களாகவே இருந்து வந்தது. இந்நிலையில், காதலருடன் கழுத்தில் மல்லிகைப் பூ மாலை அணிந்திருக்கும் அழகிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதை அவர் சூசகமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வரை

காதல் வாழ்க்கையும் இன்ஸ்டாகிராம் பதிவும்

விஜய் தொலைக்காட்சியின் 'கல்யாணம் முதல் காதல் வரை' தொடர் மூலம் இல்லத்தரசிகளின் மனங்களை கவர்ந்த பிரியா பவானி சங்கர், மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம், அருண் விஜய்யின் யானை, அதர்வாவின் குருதி ஆட்டம், சிலம்பரசனின் பத்து தல, தனுஷின் திருச்சிற்றம்பலம், கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் டிமான்டி காலனி 2 உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக தனது இடத்தை நிலைநிறுத்திக் கொண்டார்.

அண்மையில் தெலுங்கில் ரவி தேஜாவுடன் இவர் நடித்து வெளியான 'இருமுடி' திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இன்ஸ்டாகிராம் பதிவு

குவியும் வாழ்த்துகள்

தனது சமூக வலைதளப் பக்கத்தில் காதலருடன் மாலை அணிந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த பிரியா, அதற்குப் பின்னணி இசையாக 'கல்யாணமாம் கல்யாணம்... பூங்கொடிக்கு கல்யாணமாம்' என்ற புகழ்பெற்ற பாடலையும் இணைத்துள்ளார்.

இந்தப் பதிவைக் கண்ட ரசிகர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், பல ஆண்டுகளாகக் காதலித்து வந்த இத்தம்பதியினர் இல்லற வாழ்வில் இணையவிருப்பதை அறிந்து தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

திருமணத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத போதிலும், விரைவில் தேதியை பிரியா பவானி சங்கர் முறைப்படி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT